தீபாவளி: இந்த இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றிடுங்கள்
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமாக கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். அப்படியாக தீபாவளி என்பது வீடுகளில் ஒளியை கொண்டு வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். இந்த நாளில் நாம் தவறாமல் வீடுகளில் விளக்கேற்றுவது அவசியம் ஆகும்.
மேலும் தீபாவளி அன்று நம் வீடுகளில் விளக்கேற்றும் பொழுது நம் வீடுகளில் சூழ்ந்துள்ள இருள் விலகி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். அப்படியாக தீபாவளி பண்டிகை நாளில் நாம் கட்டாயம் வீடுகளில் இந்த இடங்களில் விளக்கு ஏற்றுவதை மறக்கக்கூடாது. அதை பற்றி பார்ப்போம்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி அன்று நாள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி அன்று கட்டாயமாக வீட்டின் முற்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். இவை நம் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். அதோடு வாசலில் ஏற்றப்படும் இரண்டு தீபங்கள் நம் வீடுகளில் செல்வ வாயிலை திறப்பதாக சொல்கிறார்கள்.
அதைப்போல் தீபாவளி அன்று வீடுகளில் சமையலறையில் நாம் கட்டாயம் விளக்கேற்ற வேண்டும். சமையல் அறையில் நாம் விளக்கேற்றும் பொழுது நம் வீடுகளில் உணவு தட்டுப்பாடு வராமல் இருக்கவும் நம் குடும்பத்தினர் உடைய ஆரோக்கியம் மேம்படவும் நமக்கு ஆசிர்வாதமாக அமையும். மேலும் கட்டாயமாக இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் வீடுகளில் துளசி செடி இருக்கும்.
அவ்வாறு துளசி செடி வைத்திருப்பவர்கள் துளசி செடிக்கு முன்பாக தீபம் ஏற்றுவது மிகச்சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். இவை நம் வீடுகளில் மகிழ்ச்சியையும் குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆக தீபாவளி அன்று நாம் எவ்வளவு புத்தாடைகள் அணிந்து பலகாரம் உண்டு மகிழ்ச்சியை பரிமாறி கொள்கின்றோமோ அவ்வளவு தீப ஒளியை நம் வீடுகளில் ஏற்றும் பொழுது நம் வீட்டிற்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







