இறந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையா? தீமையா?

By Sakthi Raj Apr 19, 2024 10:01 AM GMT
Report

கனவு என்பது இயல்பாக அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று.அப்படியாக கனவின் பொழுது இயல்பான விஷயங்கள் வருகின்ற பொழுது நமக்கு எந்த ஒரு சிந்தனையும் தோன்றுவதில்லை.

ஆனால்,இயல்புக்கு மீறி ஒரு விஷயம் நடக்கின்ற பொழுது, மனம் குழம்பி கொண்டு இருக்கும்.

அப்படித்தான் நம் வீட்டில் உள்ள உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் நண்பர்கள் யாராவது இறந்து போனவர்கள் நம் கனவில் வந்தால் மறுநாள் காலையில் மனம் மிகுந்த குழப்பம் அடைந்து விடும்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையா? தீமையா? | Dreams Kanavu Palan Parigarangal

அதாவது முதலில் அவர்கள் ஏன் நம் கனவில் தோன்றினார்கள் என்ன பலனாக இருக்கும் நன்மையா தீமையா இதை யாரிடம் சென்று விடை தெரிந்து கொள்வது என்ற மனம் குழப்பம் அடைந்து கொண்டு இருக்கும்.

அப்படி கனவில் இறந்தவர்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ,அதாவது பேரன் பேத்தி எடுத்த நம் வீட்டினுடைய முன்னோர்கள் வயது முதிர்வு காரணமாக இறந்தவர்கள் நம் கனவில் வரும் பொழுது நம்மை ஆசீர்வதிக்க வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையா? தீமையா? | Dreams Kanavu Palan Parigarangal

மேலும் அவர்கள் நம் வீட்டில் நடக்கக்கூடிய ஒரு விஷயத்தை முன்னெச்சரிக்கை படுத்தவும் அவர்களும் கனவில் வந்து தோன்றி கூறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆதலால் நாம் அவர்கள் நம் கனவில் வரும் பொழுது எந்த ஒரு பயமும் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் முன்னேற நாம் செய்ய வேண்டிய பரிகாரம்

வியாபாரத்தில் முன்னேற நாம் செய்ய வேண்டிய பரிகாரம்


அது மட்டும் இன்றி அவர்கள் வருகின்ற காலங்களை பொறுத்து அவர்கள் இறந்த தேதி நெருங்கி கனவில் வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கான காரியத்தை நாம் முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு விழிப்பை நமக்கு ஏற்படுத்துகிறார் என்று கூட எடுத்து கொள்ளலாம்.

ஆனால் விபத்தில் மரணம் அடைந்தவர்கள் கனவில் வரும் பொழுது நமக்கு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையா? தீமையா? | Dreams Kanavu Palan Parigarangal

அவர்கள் அப்படி கனவில் வரும்பொழுது உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.ஆனால் அதற்கும் நாம் பயப்பட வேண்டாம்.எல்லா பயத்திற்கும் ஒரே வழி இறைவன்.

ஆக அப்படி எதிர்மறையான கனவுகள் தோன்றும் பொழுது பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US