இந்த விலங்கு உங்கள் கனவில் வருகிறதா?மிகவும் கவனமாக இருங்கள்
கனவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு தான் கனவு என்று நம்பப்படுகிறது.சமயங்களில் அந்த கனவுகள் விசித்திரமாக வருவதை நாம் பார்க்க முடியும்.அதிலும் சில கனவுகள் பலிப்பதையும் நாம் கவனித்திருப்போம்.
இந்து சமயத்தில் ஒவ்வொரு கனவுகளுக்கும் பின்னாலும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது.அப்படியாக கனவில் விலங்குகள் வந்தால்,அவை நமக்கு உணர்த்துவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள்:
ஒருவர் கனவில் ஆடு வந்தால் அவை நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.அவர்களுக்கு தெய்வத்தின் அருள் பரிபூர்ணமாக கிடைப்பதோடு அவர்கள் கோரிக்கையை இறைவன் விரைவில் நிறைவேற்றுவர் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக விலங்குகளில் ஆமையின் வேகத்தை பலரும் விரும்புவதில்லை.ஆமை மிகவும் மெதுவாக செல்லும் விலங்குகளாக இருந்தாலும் ஒருவர் கனவில் ஆமை வர அவர்களின் தொழில் மிக வேகமாக வளரும். பசு அல்லது எருது கனவில் வந்தால் வீட்டில் உண்டான பிரச்சனை பிடி படியாக குறையும்.
அதோடு பசு கன்றோடு சேர்ந்து வந்தால் அவை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.அவர்களுக்கு மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கும். மேலும்,குதிரை ஒருவர் கனவில் பார்ப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வீட்டில் வளர்கின்ற செல்ல பிராணியாக நாய் கனவில் வந்தால் அவர்களுக்கு நல்ல உத்தியோகமும் சம்பள உயர்வும் கிடைக்கும். கீரிப்பிள்ளை பாம்பை கொள்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு இத்தனை நாள் தொல்லை கொடுத்த எதிரிகள் விலகி செல்வர். மயில், வானம்பாடி போன்றவற்றை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் ஏற்படும் என்று பொருள்.
யானை கனவில் வந்தால் நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் உங்களுக்கு கிடைக்கும்.யானை நமக்கு மாலையிடுவது போன்ற கனவு கண்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கப்போவதாகப் பொருள். யானை மீது அமர்ந்து வருவது போல கனவு கண்டால், எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய கனவுகள்:
ஆனால் ஓநாய் மற்றும் நாய் ஊளையிடுவது போல் கனவு வந்தால் வீட்டில் ஏதேனும் துக்கம் நடக்கபோறதற்கான அறிகுறியாகும்.குரங்கு கனவில் வந்தால் தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.
தேள் கனவில் வந்தால், ஒரு பெரிய விபத்தில் மாட்டும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.தேள் கனவில் கண்டால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சுண்டெலி கனவில் வந்தால், வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும்.
ஆக இவ்வாறான கனவுகள் ஏற்படும் பொழுது அதை பற்றி மிகவும் ஆழ்ந்து சிந்திக்காமல் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்புங்கள்.எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புங்கள்.கடவுளின் அருளால் உங்களுக்கான மன தைரியமும் கெட்ட சுழலும் மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |