அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆன்மீக குறிப்புகள்

By Sakthi Raj Oct 20, 2024 08:30 AM GMT
Report

நாம் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனைகளுக்கு ஒரு சிறிய தீர்வு தான் இருக்கும்.ஆனால் நாம் அதை தாண்டி பெரிய அளவில் மனவருத்தம் கொள்வதால் அந்த சிறிய பிரச்சனையும் பெரிதாக தெரியும். அந்த வகையில் பலரும் ஆன்மீக பரிகாரங்கள் என்றால் மிக பெரிய மெனக்கிடல் என்று எண்ணுவதுண்டு.

அதுனால் அவை செய்வது இல்லை.இப்பொழுது நம் அன்றாடம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளும் அதற்கான எளிமையான பரிகாரத்தை பற்றியும் பார்ப்போம்.

சிலருக்கு தீராத கடன் பிரச்சனைகள் இருக்கும்.அவர்களின் கெட்ட நேரமோ வரவேண்டிய பணமும் கைக்கு வராத சூழலில் மாட்டிக்கொண்டு இருக்கும்.அப்படியானவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடுவதும் மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவதும் மிக சிறந்த பரிகாரமாகும்.

அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆன்மீக குறிப்புகள் | Easy Bakthi Tips To Follow

நாம் ஹோமங்களும் அதன் பலனையும் கேள்வி பட்டு இருப்போம்.அப்படியாக ஹோமங்களில் சிறப்பு வாய்ந்தது மிருத்யுஞ்ஜயஹோமம்.அதை சிவாலயங்களில் ஈசான்ய பகுதியில் வீற்றிருக்கும் காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00.மணி ராகு காலத்தில் வழி்பட்டு மிருத்யுஞ்ஜ ஹோமம் நடத்துவதால் தீராத நோய்,மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.

குபேரரின் அருளை பெற இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

குபேரரின் அருளை பெற இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்


குடும்பத்தில் தாங்க முடியாத துன்பம் நஷ்டம் ஏற்படும் பொழுது உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.

சிலருக்கு சொத்து விவகாரங்கள் நீண்ட காலம் பிரச்சனையாக இருக்கும்.அப்படியானவர்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும்.

சிலருக்கு திடீர் என்று வாழ்க்கை இருண்டு போனது போல் ஒரு சூழல் இருக்கும்.அவர்கள் 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர இருள் நீங்கி பிறரால் ஏற்பட்ட பில்லி சூன்யம் விலகும்.

அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆன்மீக குறிப்புகள் | Easy Bakthi Tips To Follow

சிலரது வீட்டில் கணவன் மனைவி எதிரிகள் போல் வாழ்ந்து வருவார்கள்.அவர்கள் இடையே அன்பு அதிகரிக்க இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஓற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் அமைதி பிறக்கும்.

நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருப்பவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US