குபேரரின் அருளை பெற இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்
செல்வத்திற்கு அதிபதி குபேரன்.பொன் பொருள் சேர்க்கைக்கு நிச்சயம் இவரின் அருள் தேவை.அப்படியாக நாம் குபேர வழிபாடு மேற்கொள்ளும் பொழுது தவறாமல் இந்த ஒரு பொருளை நைவேத்தியமாக வைத்து படைக்க குபேரனின் பரிபூர்ண அருளை பெறலாம்.
இப்பொழுது குபேரருக்கு படைக்கும் முக்கியமான பொருளை பற்றியும் அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
மனதார தூய பக்தியோடு இறைவனுக்கு படைக்கும் எந்த ஓரு பொருளுக்கும் அதிக சக்திகள் உண்டு.அதை இறைவனும் மனதார ஏற்று கொள்ளுவார்.இருந்தாலும் ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு பொருட்கள் பிடித்தமான பொருளாக இருக்கும்.
அப்படியாக கிருஷ்ணனுக்கு வெண்ணெய் போல,அம்பிகைக்கு மாதுளை, மகாலட்சுமிக்கு வெண்தாமரை மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து தவறாது வழிபட்டு வருபவர்களுக்கு 16 செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
அது போல் குபேரருக்கு இந்த ஒரு பொருள் மிக பிடித்தமான பொருளாக இருக்கிறது. நம்முடைய இந்துக்களில் பசுவை கோமாதாவாக நினைத்து வழிபட்டு வருகின்றோம். பசுவிலிருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் தெய்வாம்சம் பொருந்தியதாக காணப்படுகிறது. அத்தகைய பொருட்களில் மிகவும் விசேஷமான ஒரு பொருள் ‘தயிர்’.
ஆனால் இந்த தயிரை பெரும்பாலும் நைவேத்தியமாக வைத்து வழிபடுவது குறைவு.உண்மையில் தயிரை நைவேத்தியமாக படைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும்,அவை உடைந்து பிரகாசமான வாழ்வு அமையும்.
இவ்வளவு விஷேசமான தயிர் பிஹார் குபேரருக்கு உகந்த பொருட்களுள் ஒன்று.தயிரை படைத்து குபேர வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னும், பொருளும் சேர்ந்து கொண்டே செல்லும். ‘தயிர்’ குபேரனுக்கு மட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கும் இஷ்டமான ஒரு பொருளாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி குபேரருக்கு ஒரு கப் தயிரை மண் சட்டியில் நைவேத்தியம் படைத்து மனதார வேண்டிக்கொள்ள வீட்டில் உள்ள பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாம் படிப்படியாக குறையும்.
மேலும்,பௌர்ணமி தோறும் தயிர் தானம் செய்து வருபவர்களுக்கும் பணக்கஷ்டம் தீர்வதாக நம்பிக்கை உண்டு.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தயிர் பாக்கெட்டை தானமாக வழங்கி வந்தால் பொன்னும், பொருளும் மட்டுமல்லாமல் சகல செல்வங்களும் கிடைக்கப்பெறுவார்கள்.
ஆக இனி குபேர வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது இந்த நைவேத்தியத்தை மறவாமல் படைத்து அவரின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |