தீராத நோய்களை தீர்க்கும் விபூதி வழிபாடு
மனிதன் எவ்வளவு தான் ஓடி சம்பாதித்தாலும் அதனை அனுபவிக்க நல்ல ஆரோக்கியம் தேவை.உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியம்.ஓரு நல்ல சிந்தனையே உடல் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் தோன்றும்.இல்லையெனில் மந்தமான நிலை ஏற்பட்டு விடும்.
சிலருக்கு என்னதான் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் தேவை இல்லாத உடல் உபாதைகள் அடிக்கடி வரும்.அதனால் அவர்கள் மிகவும் துன்புற நேரும்.எத்தனை மருத்தவர் மருத்தவம் செய்தும் அதை தீர்க்கமுடியாத சூழல் இருக்கும்
அப்படியானவர்களுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம். உடல் சோர்ந்தால் மனமும் சோர்ந்து விடும்.ஆனால் அதை போராடி ஜெயிப்பது தான் தன்மைபிக்கை.அந்த தன்மைபிக்கையோடு சேர்த்து இறை நம்பிக்கை வைக்க கட்டாயம் ஜெயித்து விடலாம்.
சைவ சமயத்தின் தந்தையாக போற்றப்படுபவர் சிவபெருமான்.இவர் கர்மவினைகளை அழித்து நம்முடைய வாழ்க்கை ஆரோக்கியம் மேம்படுத்துபவராக இருக்கிறார்.இவரை வழிபட தொடங்க நாம் அன்றாட சந்திக்கும் சிறு சிறு தொந்தரவுகள் எல்லாம் விலகி வாழ்க்கை சுகம் ஆகும்.
அப்படியாக நம்முடைய உடலும் மனமும் நல்ல ஆரோக்கியமாக இருக்க நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
சிவபெருமானின் சொத்தாக விபூதி அறியப்படுகிறது.இந்த வழிபாட்டை வீட்டிலேயே செய்யலாம்.இந்த வழிபாட்டிற்கு சுத்தமான பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட விபூதி,வில்வ இலை மற்றும் வெற்றிலை வேண்டும்.
சிவபெருமானுக்குரிய தினங்களாக கருதக்கூடிய திங்கள் கிழமை, பிரதோஷ நாள், மாத சிவராத்திரி போன்ற நாட்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.
சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாலத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வில்வ இலைகளை பரப்ப வேண்டும். அந்த வில்வ இலைகளுக்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளவேண்டும். சுத்தமான பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட விபூதியை வைத்து “ஓம் ருத்ராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அந்த வெற்றிலையின் மீது விபூதியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் நாம் அர்ச்சனை செய்ய வேண்டும். முதல் நாள் அர்ச்சனை செய்த விபூதியை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த விபூதியை உடல்நலம் குறைபாட்டால் அவதி படுபவர்களுக்கு பூசி விடவேண்டும்.மேலும் அவர்கள் அருந்தும் தண்ணீரில் சிறிய அளவு விபூதி போட்டு கொடுக்கவேண்டும்.இதோடு உரிய மருத்துவரை ஆலோசித்து அந்த நோய்க்குரிய மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முழு மனதோடு இந்த விபூதி வழிபாட்டை மேற்கொண்டு பூசி கொள்ள ஆரோக்கியம் மேன்மை அடைந்து முன்னேற்றம் காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |