ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதா? இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் வாழ்க்கையே மாறும்
ஜோதிடத்தில் கிரகங்கள் இருக்கக்கூடிய இடங்களை வைத்து தான் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நடக்கிறது. அப்படியாக, ஜோதிட ரீதியாக தோஷம் என்று ஒருவார்த்தை சொல்லி கேள்வி பட்டு இருப்போம். உண்மையில் அந்த தோஷம் என்பது நாம் நம்மை திருத்திக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருப்பினும் மக்கள் சமயங்களில் நாம் சொல்லுகின்ற நல்லதை கவனமாக எடுத்துக் கொண்டு செயல்படாத நிலையில் இருக்கும் போது தான் அதற்கு தோஷம் என்ற ஒரு பெயரை வைத்து அவ்வாறு சொன்னால் அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றங்களை நிகழ்த்த ஒரு நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று சில ஜோதிடர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
அப்படியாக ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் அதிலிருந்து எவ்வாறு நிவர்த்தி பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு பரிகாரங்கள் இருக்கிறது. இருந்தாலும், பொதுவாக நாம் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் பலவிதமான தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

ராகு- கேது , சுக்கிர தோஷம், சூரிய தோஷம் என்று ஒவ்வொரு கிரகங்களுக்கும் அது இருக்கக்கூடிய அமைப்பை பொறுத்து தோஷங்கள் உருவாகுகிறது. அந்த வகையில் ராகு கேது தோஷம் என்கின்ற இந்த சர்ப்ப தோஷமானது தான் வாழ்க்கையில் நிறைய தடைகளை அவர்களுக்கு கொடுத்துவிடும்.
எந்த ஒரு செயலை செய்தாலும் இவர்களை முதலில் முடக்கி போட்டு விடும். பிறகு தான் இவர்களுக்கு ஒரு படிப்படியான ஒரு வளர்ச்சியை கொடுக்கும். இதற்கு ஒரு முக்கிய பரிகாரம் என்னவென்றால் சற்று பொறுமையாக இருந்தால் காலம் மாறும் பொழுது நம்முடைய தோஷமும் கரைந்து விடும்.
ஆனால் அது ஒவ்வொருவருக்கும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்பது அவருடைய ஜாதகத்தில் நடக்கக்கூடிய தசா புத்திகள் வைத்து தான் நாம் சொல்ல முடியும். அந்த வகையில் காலம் மாறட்டும் என்று நாம் காத்திருப்பதை காட்டிலும் ஒரு சில பரிகாரங்களை நாம் செய்ய தொடங்கிவிட்டோம் என்றால் நிச்சயம் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கும். அதைவிட நமக்கு புண்ணியம் வந்து சேரும்.
அப்படியாக ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பரிகாரம் என்னவென்றால் இவர்கள் மீன்களுக்கு உணவு அளிக்க வேண்டும். முடிந்தவர்கள் வீடுகளிலே ஒரு மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் மீன்கள் வளர்த்து தவறாமல் தொடர்ந்து உணவு அளித்து வருவதும் ஒரு நல்ல மாற்றத்தை அவர்களுக்கு கொடுக்கும் அல்லது விலங்குகள் பறவைகள் என்று இவர்கள் தேடி தேடி தினமும் மனதார உணவு வைத்து வந்தால் நிச்சயம் இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் கிடைக்கும்.

மேலும், தோஷம் இருப்பவர்கள் கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதை காட்டிலும் ஒருவர் ஒரு உயர் உடைய ஆன்மாவை திருப்தி அடையச் செய்தால் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
அதாவது பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு, ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகள் அல்லது கஷ்டப்படுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றால் நிச்சயம் மிக சிறந்த மாற்றம் இவர்களை வந்து சேரும்.
இறைவனை சரண் அடைவதை காட்டிலும் சுற்றி உள்ள உயிர்களை இவர்கள் புரிந்து கொண்டு அதற்கு அன்பு பாராட்டி இயற்கையை இவர்கள் மதித்து போற்றி நடக்க தொடங்கினாலும் இந்த தோஷமானது விரைவில் விலகும். உண்மையில் இயற்கை தான் இறைவன்.
அந்த இயற்கையை நாம் சரியாக மதித்து எதையும் அவமதிக்காமல் வாழ்ந்து வந்தோம் என்றாலே பிரச்சனைகள் நம் வாழ்க்கையை இல்லை. தோஷம் என்ற ஒரு தடைகளும் படிப்படியாக குறைந்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |