நீங்கள் பிறந்த தேதி இதுவா? 2026-ல் இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்
ஜோதிடம் போலவே எண் கணிதமும் நமக்கு மிகச் சரியான கணிப்பை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவு ரீதியாக நிறைய சங்கடங்கள் வர காத்திருக்கிறது என்றும் அவர்கள் எந்த விஷயங்களில் தன் துணையுடன் மிகுந்து கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பதை பற்றி ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கான 2026 பலன்களைப் பற்றி பார்ப்போம்.

எண் 1,10,19 28:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டு உறவு ரீதியாக ஒரு இக்கட்டான நிலை வரப்போகிறது. அதாவது காதல் அல்லது திருமண வாழ்க்கையில் இவர்கள் அதிக நேரம் செலவிட முடியாத ஒரு நிலை உண்டாகி கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம்.
எண் 2:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிக அளவிலான பிணைப்புகளை துணையுடன் வைத்திருப்பார்கள். அந்த கண் முடித்தனமான காதலே சில நேரங்களில் இவர்களுக்கு ஒரு புரிதல் இல்லாத ஒரு நிலையை கொடுத்து விடும்.
எண் 3,12,21, 30:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் நிச்சயம் அவர்கள் உறவுகளை குழந்தைத்தனமான குணங்களை விடுத்து ஒரு நல்ல பக்குவமான நிலையில் அவர்களுடைய உறவுகளை கையாண்டால் மட்டுமே இவர்களால் அந்த உறவில் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும்.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு அவர்களுடைய இலட்சியத்திற்காக அதிகமான உழைப்புகளை கொடுத்து ஓடக்கூடிய ஆண்டு. அதனால் இவர்களுடைய உறவுகளுக்கு இவர்கள் அதிக நேரம் செலவிட முடியாமல் போகக்கூடிய நிலை உண்டாகும். அதுவே இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கும்.

எண் 5, 14, 23:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் நிச்சயம் இவர்களுடைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில் அவர்களுடைய துணையின் சுதந்திரத்திற்கு ஒரு முக்கிய பங்கு கொடுக்க வேண்டும். எப்பொழுதும் தங்களுடைய துணையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்தால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகும்.
எண் 6, 15, 24:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அவர்களுடைய துணையை எப்பொழுதும் அதிகமாக நேசித்து கொண்டிருக்கிறார்கள்? எல்லா விஷயங்களிலும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அதீத அன்பே இவர்களுக்கு பிரச்சனையாக மாறப்போகிறது. ஆதலால் சற்று விலகி நின்று உங்களுடைய துணையை காதலித்தால் நன்மை உண்டாகும்.
எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இடமாற்றகிம் காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். ஆக அந்த தொலைதூர காதல் வாழ்க்கையே இவர்களுக்கு ஒரு விதமான வெறுப்பையும் சரியான புரிதல் இல்லாத ஒரு நிலையையும் கொடுத்து விடும்.
எண் 8:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இந்த வருடத்தில் அவர்களுடைய வேலை ரீதியாக நிறைய சங்கடங்களை சிந்திக்க கூடிய நிலை இருக்கின்றதால் அந்த வெறுப்புகளை இவர்கள் தங்களுடைய வாழ்க்கை துணையிடம் காட்டாமல் இருந்தாலே உறவு இனிமையாக இருக்கும்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு நிச்சயம் அவர்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுடைய அதிக எதிர்பார்ப்பேஉறவுகளுக்குள் ஒரு சில சிக்கலை உண்டு செய்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |