கண் திருஷ்டியின் தாக்கம் குறைய எளிய இந்த ஒரு பரிகாரங்கள் செய்யுங்கள்
திருஷ்டி என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்று. நம்மை சுற்றி இருக்கக்கூடிய மனிதர்களுடைய பார்வையானது எவ்வாறு இருக்கிறது என்பது கட்டாயம் நாம் அறிந்து கொள்ள முடியாது. இருப்பினும் அவர்களுடைய எதிர்மறை பார்வையானது நம்மை சில நேரங்களில் ஒரு சில தாக்கத்திற்கு ஆளாக்கி விடுகிறது.
அப்படியாக இந்து மதத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வீடு திரும்பிய பொழுது கட்டாயம் குடும்பத்தினர் அனைவரையும் அமர வைத்து அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடும் வழக்கம் வைத்திருப்போம்.
மேலும், இந்த திருஷ்டி கழிக்கும் முறை என்பது ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தாற்போல் பல்வேறு வழியில் செய்கிறார்கள். அந்த வகையில் நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்றால் அங்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய முக்கியமான பொருள் என்றால் கல் உப்பு இருக்கிறது.

அதனால் தான் குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு கலந்து குளித்தால் நம் உடலில் இருக்கக்கூடிய தீய ஆற்றல்கள் வெளியேறும் என்று சொல்வார்கள். அதோடு, பலரும் அறிந்திடாத ஒரு எளிய வகையான திருஷ்டி கழிக்கும் முறை இருக்கிறது.
இதை நாம் வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது உடனடியாக செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் சிறிதளவு கல் உப்பை கையில் எடுத்துக்கொண்டு உங்களுடைய கைகளை நல்ல சுத்தமாக தண்ணீரில் கழுவும் பொழுது உங்களை சூழ்ந்துள்ள தீய ஆற்றலானது விலகும்.
கூடுதலாக உங்களுடைய ஆன்மாவையும் இது சுத்தப்படுத்தும். ஆக வெளியே சென்று வீடு திரும்பிய பொழுது திருஷ்டி சுற்றி போடுவதற்கு நேரம் இல்லை என்று வருந்தாமல் இந்த முறையில் நீங்கள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |