Vastu Tips For Home: நோய்நொடி அண்டாமல் இருக்க வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகள்
வாஸ்து என்பது ஜோதிடத்தில் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும். காரணம், வாஸ்து தான் அங்கு வசிப்பவரின் உடல் நலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, பொருளாதாரம், இவை அனைத்திற்கும் முக்கிய காரணியாக அமைகிறது.
மேலும், வாஸ்து சரி இல்லாத வீடுகளில் இவை அனைத்தும் கொஞ்சம் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கமுடியும். அப்படியாக, நாம் வீடுகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் ஒரு பொழுதும் சமையலறையும் குளியல் அறையும் நேருக்கு நேர் இருக்கக்கூடாது. அதாவது நெருப்பு, மற்றும் நீர் இவை இரண்டும், எதிர் எதிராக இருக்கும் பொழுது அது மோதல்களை குறிக்கிறது. இவை குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நலத்தையும், மன நிலையும் பாதிக்க செய்யும்.
2. அதே போல் நாம் வீடுகளில் உறங்கும் பொழுது தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது தான் நன்மையை செய்யும். ஒரு பொழுதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது. அவை உடல் நிலையில் பெரிய மாறுதல்களை உண்டு செய்கிறது. இதனால் அடிக்கடி தலைவலி, சோர்வு அல்லது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
3. எப்பொழுதும் படுக்கைக்கு அடியில் பொருட்களை தேக்கி வைக்கக்கூடாது. அது தேவை இல்லாத மன அழுத்தத்தை கொடுத்து விடும்.
4. வாஸ்து சாஸ்திரத்தில் வடகிழக்கு மூலை கடவுளின் இடமாகக் கருதப்படுகிறது. அதனால் அதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த இடங்களில் கனமான அல்லது அழுக்காக வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் வீடுகளை சூழந்து விடும்.
5. கழிப்பறை வடகிழக்கில் (ஈசான மூலை) இருந்தால், அது மிகப்பெரிய வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கிறது.
6. வீடுகளில் நீர் தொட்டி அமைக்கும் இடம் மிக முக்கியமானதாகும். நீர் தொட்டி வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். தவறான திசையில் அமையும் பொழுது அவை அதீத மன அழுத்தத்தை கொடுக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |