இன்றைய ராசி பலன்(05.02.2025)
மேஷம்:
இன்று பலருக்கும் உடல் சோர்வு மன சோர்வு உண்டாகும்.அலுவலகத்தில் எதிர்பாராத விஷயம் நடக்கும்.நண்பர்களுடன் வெளியூர் செல்வீர்கள்.புதிய அனுபவங்கள் பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று நெருங்கியவர்களாவே இருந்தாலும் பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.ஒரு சிலர் திட்டமிட்டபடி நினைத்த வேலையை செய்வார்கள்.சிலருக்கு காணாமல் போன பொருட்கள் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்:
மனதில் இடைவிடாது குழப்பங்கள் தோன்றும்.குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் உருவாகும்.கணவன் மனைவி இடையே மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.மனதில் உள்ள குழப்பங்கள் விலகும்.
கடகம்:
அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.வியாபாரி தங்கள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர்.
சிம்மம்:
தொழிலில் உங்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.எதிர்பாராத லாபம் உண்டாகும்.கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.சிலர் மதியம் மேல் வெளியூர் செல்ல நேரிடலாம்.
கன்னி:
சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வடையும். செயல்களில் சிரமம் தோன்றும்.இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
துலாம்:
உங்கள் செல்வாக்கு உயரும்.சிலர் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.மனதில் இறைபக்தி அதிகரிக்கும்.ஒரு சிலர் தேவை இல்லாத விஷயங்களை நினைத்து மனக்கவலையில் மூழ்குவார்கள்.
விருச்சிகம்:
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். முயற்சியில் லாபம் ஏற்படும்.
தனுசு:
சிலருக்கு மறைமுக எதிரிகள் வருவார்கள்.வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.சிலருக்கு உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும்.இருந்தாலும் அலுவலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்:
நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.
மீனம்:
சிலருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சன்னைகள் எல்லாம் படிப்படியாக விலகும்.செலவு அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.உங்கள் விருப்பம் நிறைவேறும்.பிறருக்கு கொடுத்த வகை காப்பாற்றுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |