வீட்டில் இந்த திசையில் காலணிகளை விட்டால் பண கஷ்டம் வருமாம்

By Yashini Apr 22, 2024 06:29 PM GMT
Report

இந்து மதத்தில் வீடு கட்டுவது முதல் அதன் அலங்காரம் வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியமாக பார்காமப்படுகிறது.  

அதேபோல், வீட்டில் காலணி வைப்பது முதல் ஆடை பராமரிப்பு வரை வாஸ்து முக்கியம்.

வாஸ்து சாஸ்திரத்தில் ஷூ மற்றும் செருப்புகளை வீட்டில் வைக்க சில விதிகள் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் இந்த திசையில் காலணிகளை விட்டால் பண கஷ்டம் வருமாம் | Footwear Vastu Tips In Tamil

வீட்டில் காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.

வீட்டில் இந்த திசையில் காலணிகளை விட்டால் பண கஷ்டம் வருமாம் | Footwear Vastu Tips In Tamil

வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, ​​தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும். 

வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், காலணிகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. ஏனென்றால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US