மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

By Sakthi Raj Nov 29, 2024 09:36 AM GMT
Report

எல்லாம் கற்று தெளிந்து இறப்பு நேரும் என்பது சாத்தியம் இல்லை.நாம் வளரும் பொழுது தான் படி படியாக வாழ்க்கை அனுபவங்கள் புரிந்து கொண்டு வெற்றி அடைய எதை ஏற்று கொள்வது எதை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றோம்.

அப்படியாக நாம் சில விஷயங்களில் புரியாமல் சிக்கி கொண்டு தவிப்பது உண்டு.அதனால் பெரும் ஆபத்துகள் நிகழ்ந்து விடும்.நாம் இப்பொழுது நிம்மதியான வாழ்க்கை வாழ கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களை பற்றி பார்ப்போம்.

மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள் | Four Important Things Man Should Be Carefull

மனிதனின் அறியாமை அவனை மிக பெரிய துன்பத்திற்குள் தள்ளிவிடும்.உதாரணமாக தண்ணீரில் நீந்தும்  மீனுக்கு ஒரு போதும் தெரிவதில்லை அதனை நோக்கி செல்லும் இரையால் தான் அதனின் உயிர் பிரிய போகிறது என்று.இவை அந்த மீன் சந்திக்கும் அறியாமை உணர்த்துகிறது.

இதே போல் தான் மனிதன் தன்னை நோக்கி வருவது எல்லாம் பொன் என்றும்,தன்னிடம் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும் கண்முடி தனமாக நம்பினால் இறுதியில் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம். சிலருக்கு அவர்கள் நடவடிக்கை சும்மா இருந்தாலும் அவர்களின் வாய் அவர்களுக்கு மிக பெரிய எதிரியாக இருக்கும்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக செய்யவேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரம்

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக செய்யவேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரம்

உதாரணமாக தவளை எடுத்துக்கொள்வோம்.தவளை தன வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு.அதாவது தவளை அதனுடைய சத்தத்தினால் பாம்புக்கு இரை ஆகிறது.இதன் பெயர் தான் வாய்க்கொழுப்பு.ஆதலால் நாம் பல இடங்களில் அமைதியாக இருந்தாலே நம்மை நோக்கி வரும் பாதி பிரச்சனை சரி ஆகிவிடும்.

நாம் எப்பொழுதும் நம்முடைய சக்தியை ஏழ்மையான மனிதர்கள் இடத்திலோ,நம்மை விட சற்று குறைந்த மன வலிமை உடையவர்கள் இடத்திலோ காண்பிக்க கூடாது.அதன் பெயர் தான் ஆணவம்.ஆணவம் கொண்டு அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கின்றனர்.

மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள் | Four Important Things Man Should Be Carefull

மனிதனுக்கு இருக்கும் குணங்களில் அவன் மாத்தி கொள்ள வேண்டிய முக்கியமான குணம்.அவசரம்.இந்த அவசரத்தால் பலரும் தங்கள் வாழ்க்கை இழந்து நிற்பதை பார்க்க முடியும்.உதாரணமாக தேள் எடுத்து கொள்வோம்.அது நம்மை கடித்தால் உடனே கொன்று விடுவோம் என்று தெரியும்.

இருந்தாலும் அது நம்மை கடிப்பதை நிறுத்தவில்லை.நம்மை எதோ செய்யப்போகிறார் என்று தன்னை தற்காத்து கொள்ள கடித்து விடுகிறது.பிறகு அதன் அவசரத்தில் எடுத்த முடிவால் அவதி படுகிறது.அதை போல் மனிதன் எதையும் நிதானமாக யோசிக்காமல் முடிவு எடுத்து விட்டால் அவன் வரும் காலங்களில் அவஸ்தை படவேண்டியது இருக்கும்.

ஆக மனிதன் அறியாமை,ஆணவம்,வாய் கொழுப்பு அவசரம் இவைகள் இல்லாமல் வாழ அவன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.மேலும் அவனுக்கு வரும் பாதி பிரச்சனைகளில் இருந்து அவன் தப்பித்து விடலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US