வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீர்கள்

By Sakthi Raj Jun 06, 2026 07:27 AM GMT
Report

இந்து மதத்தில் ஒரு மனிதனுக்கு அன்பையும், செல்வத்தையும், மகிழ்ச்சியும் கொடுக்கக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். மகாலட்சுமியின் அருட்பாவை ஒருவர் மீது பட்டு விட்டால் அந்த நபர் மிகவும் உயர்ந்த இடத்தை அடைந்து விடுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள் எல்லாம் விலகும்.

அந்த வகையில், மகாலட்சுமி நம்முடைய வீடுகளில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் நாம் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். அதேபோல் ஒரு விஷயங்கள் ஒரு சில விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீர்கள் | Friday Remedies To Get Goddess Lakshmi Blessings

பிரச்சனைகள் தீர லலிதா சகஸ்ரநாமத்தை சொல்ல வேண்டிய முக்கியமான கோயில்

பிரச்சனைகள் தீர லலிதா சகஸ்ரநாமத்தை சொல்ல வேண்டிய முக்கியமான கோயில்

வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1. சுக்கிர ஹோரை பரிகாரம்:

மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறவும் நம்முடைய வீடுகளில் செல்வமும் அதிர்ஷ்டமும், மன அமைதியும் நிறைந்த இருக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மதியம்1 மணி முதல் 2:00 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் புதிய ஜாடியில் கலப்பை நிரப்பி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

2. தாமரை தண்டு திரி தீபம்:

வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி ஏற்றி வழிபாடு செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் பெறலாம்.

2026: ராகு கேது பெயர்ச்சி: மேஷ ராசிக்கு எப்படி உள்ளது? முழு பலன்கள் இதோ

2026: ராகு கேது பெயர்ச்சி: மேஷ ராசிக்கு எப்படி உள்ளது? முழு பலன்கள் இதோ

3. நறுமண வழிபாடு :

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தேவிக்கு வாசனை நிறைந்த மல்லிகை அல்லது தாமரை மலர்கள் சாற்றி சாம்பிராணையுடன் சிறிது ஜவ்வாது கலந்த தூபம் காட்டினால் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் விலகி நல்ல அதிர்வலைகள் உருவாகும்.

4. கோமாதா வழிபாடு :

வெள்ளிக்கிழமை அன்று பசு மாட்டிற்கு அகத்திக்கீரை பழங்கள் அல்லது பச்சரிசி கலந்து தயாரித்த உணவை கொடுத்து வரும் பொழுது நமக்கு மகாலட்சுமி அருள் கிடைக்கிறது.

5. கனகதாரா ஸ்தோத்திரம் :

வெள்ளிக்கிழமையில் மாலை அல்லது இரவு நேரத்தில் தூங்கும் முன்பு பூஜை அறையில் அமர்ந்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதையும் அதை நம் வீடுகளில் ஒலிக்கச் செய்து நாம் கேட்பது நமக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நல்ல அதிர்வலைகள் கிடைக்கும். அதே போல் வீடுகளிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். இதனால் மன அமைதி உருவாகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீர்கள் | Friday Remedies To Get Goddess Lakshmi Blessings

வெள்ளிக்கிழமையில் தவிர்க்க வேண்டியவை :

எந்த நேரத்திலும் எந்த நாளிலும் மாலை நேரத்தில் வீடுகளை பொருக்க கூடாது. அதிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் விளக்கேற்றும் நேரத்தில் வீடுகளை பெருக்குவது, வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் நிலைப்படியில் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியின் அருள் நிலைத்து இருக்க அந்த நாளில் மட்டும் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆனால், உதவிகள் செய்யலாம். அதேபோல் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பால், உப்பு, ஊசி, தயிர் ஆகிவற்றை ஒருவருக்கு கடனாக கொடுக்கக் கூடாது.

ஆனால், கட்டாயமாக உதவி என்று நாடி வருபவர்களுக்கு இவை நான் வழங்கலாம். உதவி செய்வதற்கு எந்த நேர காலமும் கிடையாது. அதனால், நிச்சயம் நமக்கு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US