வெள்ளிக்கிழமை வீடுகளில் நாம் செய்ய கூடாதவை
வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாள்.அந்த நாளில் நாம் வீடுகளை சுத்தம் செய்வது ஒட்டடை அடிப்பது போன்ற காரியங்கள் செய்தல் கூடாது.
அதனால் வியாழன் அன்றே வீட்டை துடைத்து பூஜை அறைகளை சுத்தம் செய்து வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்து கொள்ளவேண்டும்.
வெள்ளி கிழமையில் மஹாலக்ஷ்மி நம் வீட்டுக்குள் வரவேண்டும்.ஆதலால் சுத்தம் செய்யும் வேலையை வியாழன் அன்று முடித்து வைப்பது உகந்தது.
மேலும் வெள்ளி கிழமை மறந்தும் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்த்து விடவேண்டும்.பின் பொன் நகைகள் போன்றவற்றையும் பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் உப்பு வாங்கி நிரப்பி வைக்கலாம்.பின் வீட்டுக்கு தேவையான காய் கறிகள் அரிசி வாங்கி நிரப்பி வைக்க மஹாலட்சுமி அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது.தீய சக்திகள் இருந்தாலும் நாம் தூபம் போடுவதால் அது நம்மை விட்டு அகலும் என்பது நம்பிக்கை.
முடிந்த அளவு வெள்ளிக்கிழமையில் காலை மாலை விளக்கு ஏற்றுவது வீட்டில் நன்மையை தரும்.
சிறு சிறு விஷயங்கள் ஆக இருந்தாலும் அதை நாம் பின் பற்றினால் அது பெரிய பலன்கள் மற்றும் மாற்றங்களை கொடுக்க கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |