செய்யும் காரியம் வெற்றி பெற வெள்ளிக்கிழமை வராஹி அம்மன் வழிபாடு
மனிதன் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையில் போராட்டம் இல்லை என்றால் மனிதன் இறைவனை ஒரு பொழுதும் நினைக்கபோவது இல்லை.இன்னும் சொல்ல போனால் துன்பம் இல்லாத மனிதன் மனம் இரக்கமற்று இருக்கும்.
ஆக,ஏதோ ஒரு வலி ஏற்படும் பொழுது தான் தனக்கும் மேல் ஒருவன் என்ற ஞானம் அவனுக்கு தோன்றுகிறது.அந்த வகையில் தர்மம் அதர்மம் போராட்டங்கள் இன்னும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.பிறரை இரக்கம் இல்லாமல் புண்படுத்துவது.
பொறாமையால் ஒரு குடும்பத்தை கெடுக்க நினைப்பது என்று மோசமான செயல்களில் மனிதன் சிறிதும் தயக்கம் இல்லாமல் ஈடுபடுகிறான். அதில் நல்லவர்கள் மனம் மிகவும் துன்பப்பட்டு வருந்தி அழுகிறது.அந்த அழுகை கண்டு ரசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
ஆனால்,நல் உள்ளம் படைத்தவர்கள் இதற்கெல்லாம் பழிவாங்குவதை ஒரு பொழுதும் ஆயுதமாக கையில் எடுப்பதில்லை.இறைவனை சரண் அடைந்து விடுகிறார்கள்.அவன் பார்த்து கொள்வான் என்று உறுதியாக நடைபோடுகிறார்கள்.
அப்படியாக வெற்றி சின்னமாக திகழ்ந்து அருள்புரிபவள் வராஹி அம்மன்.அவளை வெள்ளைக்கிழமை வழிபாடு செய்தால் வந்த துன்பம்,செய்கின்ற காரியம்,எதிரிகள் தொல்லை என்று அனைத்தும் விலகும். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யுங்கள்.
காலையில் எழுந்து வாசலை கூட்டி கோலம் போட்டு முடிந்தால் குளித்து வழிபாடு செய்யுங்கள்.இல்லை கை கால்கள் முகம் கழுவி கொண்டு இந்த வழிபாட்டை செய்ய தொடங்குங்கள். வராஹி அம்மனுக்கு என்று தனியாக ஒரு விளக்கை வைத்து கொள்ளுங்கள்.
இதை பூஜை அறையில் இறைவன் முன் ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு மனதார உங்கள் வேண்டுதலை வையுங்கள்.தெரிந்தவர்கள் வராஹி அம்மன் ஸ்லோகங்கள்,மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யுங்கள்.இந்த வழிபாட்டிற்கு எந்த ஒரு பொருளும் தேவை இல்லை.
உங்கள் மனதில் நம்பிக்கையும் நல்ல எண்ணங்கள் இருந்தாலே போதும்.அந்த வராஹி அம்மன் அருளால் உங்கள் கஷ்டம் எல்லாம் படிப்படியாக குறைந்து செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |