அதிர்ஷ்டம் உண்டாக வெள்ளிக்கிழமை வாராஹி வழிபாடு
மனிதனுக்கு துன்பம் எவ்வளவு அதிகம் வருகிறதோ அந்த அளவிற்கு அவன் கடவுளிடம் நெருக்கம் ஆகின்றான் என்று அர்த்தம்.வலித்தால் தானே மருத்துவர் தேடி செல்வோம்.அப்டித்தான் மனிதனும்.மனதில் மகிழ்ச்சி பொங்க கடவுளை நினைக்க நேரம் கிடைப்பதில்லை.
ஆனால் ஒரு சிறு துன்பம் பிரச்சனை வர அவன் கடவுளே நீ தான் என் வலிக்கு பொறுப்பு என்னை காத்தருள் என்று சரண் அடைந்து விடுவார்கள்.அப்படியாக உலகத்தில் துன்பத்தை கடந்தால் இன்பம் என்ற நியதி உண்டு.மனிதன் எவ்வளவு துன்பம் அனுபவிக்கின்றானோ அதற்கு மேலாக இன்பம் அனுபவிப்பான்.
ஆனால் அவனுக்கு கொஞ்சம் நிதானமும் பொறுமை இருக்க வேண்டும்.நமக்கு உண்டாகும் துன்பத்தை வெல்ல நாம் சரண் அடையவேண்டியவள் வராஹி அம்மன்.வாழ்க்கையில் நடக்கும் போர்களை கடந்து செல்ல வாராஹி அம்மனை மனதார வழிபாடு செய்து வர நிச்சயம் நம்முடைய துன்பங்கள் விலகி நம்முடைய வாழ்க்கை செழிப்பாகும்.
மேலும்,துன்பம் நம் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ளும் பொழுது வாராஹி அம்மனின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் நிச்சயம் திடீர் அதிர்ஷ்டத்தால் அந்த துன்பம் விலகி இன்பம் சூழ்வதை காணமுடியும்.
மந்திரம்:
“ஓம் ஸர்வ வஸ்ய வாராஹ்யை நேத்ரத்ராயய வௌஷட்”
உங்களால் சமாளிக்க முடியாத துன்பத்தில் சிக்கி தவிக்கும் பொழுது மனதார இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யுங்கள்.அம்மன் அருளால் உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |