சனியுடன் சுக்கிரன் உண்டாகும் அர்த்த கேந்திர யோகம்.. பண மழை யாருக்கு?
கிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதேபோல் சுக்கிர பகவானும் அவருக்குரிய கால அவகாசங்களில் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.
அப்படியாக ஜனவரி 28ஆம் தேதி இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 45 டிகிரி கோண தொடர்பை கொண்டு வலிமையான அர்த்த கேந்திர யோகம் உருவாக்க இருக்கிறார்கள். தற்பொழுது மகர ராசியில் இருக்கும் சுக்கிர பகவான் அங்கு இருக்கக்கூடிய சூரியன் செவ்வாய் மற்றும் புதனுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்.
இதனிடையே தற்பொழுது சனியுடன் சுக்கிரன் இணைவது ஒரு சில ராசிதர்க்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சனியுடன் சுக்கிர பகவான் இணையும் காலகட்டமானது இவர்களுக்கு தனித்துவமாக செயல்படக்கூடிய திறனை கொடுக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் துணிச்சலாக இவர்கள் நிறைய முடிவுகளை எடுக்கப் போகிறார்கள். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடக்கூடிய காலமாகும். சிலருக்கு தங்க நகைகள் வந்து குவிய போகிறது.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த சேர்க்கையானது கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுக்கப் போகிறது. காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். நீண்ட நாட்களாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் கட்டாயம் அந்த பொருளை வாங்கக்கூடிய யோகம் உருவாகும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவையும் இவர்கள் பெறுவார்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த சேர்க்கையானதுஇவர்களுக்கு சொத்து வழக்குகளில் இருந்த பிரச்சனைகளை சரி செய்து கொடுக்கப் போகிறது. குடும்பத்தினருடைய தேவையை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். வெளிநாடு தொடர்பான பணவரவு உங்களுக்கு எந்த ஒரு தடையும் இன்றி வரும். விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு புதிய மாற்றம் உண்டாக கூடிய காலகட்டம். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனை விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |