மொய் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன்?
மனிதனுக்கு சொந்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.அப்படியாக அவர்கள் தினமும் சந்தித்து கொள்ள முடியவில்லை என்றாலும் விஷேச மற்றும் துக்க நாட்களில் நாட்களில் கட்டாயம் ஒன்று கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவார்கள்.அப்படியாக எந்த ஒரு விஷேச நிகழ்வு என்றாலும் நம்முடைய பழக்கத்தில் மொய் செய்யுதல் என்று காலம் காலமாக இருந்து வரும் விஷயம் ஆகும்.
அப்படியாக நம்முடைய சொந்தங்களுக்கு மொய் செய்யும் பொழுது எவ்வளவு ரூபாய் செய்கின்றமோ அதோடு சேர்த்து கட்டாயம் ஒரு ரூபாய் நாணயம் வைத்து அதை 101 அல்லது 1001 என்று வைப்போம்.இதை பலரும் காரணம் தெரியாமல் பலரும் கடமையாக செய்கின்றனர்.அப்படியாக நாம் ஏன் மொய் செய்யும் பொழுது ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன. அதுவும் ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை(குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது.
எனவேதான் இது " தர்மம் " தவறாது சம்பாதித்த " நாணயம் " இதை நீங்களும் தர்மம் தவறாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும்வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது.
அதனால், மொய் செய்பவருக்கும் தாம் மன நிறைவாக செய்து விட்டோம் என்று நிம்மதி உருவானது.ஆனால் கால போக்கில் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வர அவை நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்கள் உருவாக்கப்பட்டன.
அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே தான் நாம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
ஒருவர் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் பொழுது மொய் வைப்பது ஒரு நல்ல விஷயம்.அதனால் தான் முன்னோர்கள் இந்த பழக்கத்தை கொண்டு வந்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |