எந்த ஊர் சிவன் கோவிலை தரிசித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
அந்தவகையில், எந்த ஊருக்குச் சென்று எந்த சிவன் கோவிலை தரிசிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
திருக்கருக்குடி கோவில்- குடும்ப கவலை நீங்கும்.
திருக்கருவேலி கோவில்- குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.
திருவழுந்தூர் கோவில்- முன்ஜென்ம பாவம் விலகும்.
திருப்பராய்துறை கோவில்- கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.
திருநெடுங்களம் கோவில்- வணங்கினால் தீரா துயர் தீரும்.
திருவெறும்பூர் கோவில்- வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.
திருப்பைஞ்ஞீலி கோவில்- எம பயம் விலகும்.
திருவையாறு கோவில்- அக்னி தோஷம் விலகும்.
திருவைகாவூர் கோவில்- வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.
திருமங்கலங்குடி ஈசன் கோவில்- குழந்தை பாக்கியம் பெறலாம்.
திருமணஞ்சேரி கோவில்- திருமண தோஷம் விலகும்.
திருமுல்லைவாயல் ஈசன் கோவில்- சந்திர தோஷம் விலகும்.
திருவெண்காடு கோவில்- ஊழ்வினை தோஷம் நீங்கும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்- மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.
திருக்குற்றாலம் குற்றால நாதர் கோவில்- முக்தி கிடைக்கும்.
திருவாலவாய் கோவில்- நட்சத்திர தோஷம் நீங்கும்.
திருப்பரங்குன்றம் கோவில்- வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.
திருவாடானை கோவில்- தீராத பாவம் நீங்கும்.
திருமுருகநாத சுவாமி கோவில்- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.
திருப்பாதிரிபுலியூர் கோவில்- தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.
திருவேற்காடு ஈசன் கோவில்- வாணிப பாவம் விலகும்.
திருமயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவில்- 3 தலைமுறை தோஷம் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |