50 ஆண்டுகளுக்கு பின் ராஜயோகம் - இந்த 3 ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்
சந்திரன் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிகளுக்கு ஏற்படக்கூடிய நலன்களை பார்க்கலாம்.
சந்திரன் 2 1/2 நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அதன் அடிப்படையில், (மார்ச் 14) ஹோலி அன்று சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இங்கு ஏற்கனவே குரு பயணிக்கிறார்.
இதனால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஹோலி நாளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. எனவே, இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.
மிதுனம்
வேலை தேடிக் கொண்டிருந்தால், புதிய வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து பரிவர்த்தனைகளால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும். லர் புதிய வீடு, சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.