திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி விழா
திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர மாநிலம் திருப்பதி நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும்.
இது திருமலை ஏழுமலையானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது, மேலும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
திருமலையில் உள்ள ஏழு மலைகளில், ஏழாவது மலையில் கோயில் அமைந்துள்ளதால், ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு பிரம்மோற்சவம் மற்றும் பவித்ர உற்சவம் போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கருட பஞ்சமி விழா வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் செல்ல உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







