கருட புராணம்: இந்த 3 விஷயங்களை மட்டும் பாதியில் விட்டுவிடாதீர்கள்
கருட புராணம் என்பது விஷ்ணு பகவானுக்கும் கருடற்கும் இடையே இருக்கக்கூடிய உரையாடல் ஆகும். இந்த கருட புராணத்தில் நம் மனித வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், கருட புராணத்தில் மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இந்த 3 விஷயங்களை மட்டும் பாதியில் விட்டு விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அவ்வாறு விட்டு விடுகின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையில் அவை மிகப்பெரிய அளவில் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

கடன் திருப்பி செலுத்துதல்:
ஒருவரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு நிலையில் கடன் வாங்கி இருந்தால் அதனை உடனடியாக திரும்பக் கொடுப்பது அவசியமாகும். ஏதேனும் காலதாமதப்படுத்துவதன் வழியாக உறவுகளில் சில சிக்கல்களும் விரிசலும் ஏற்படும்.
ஒருவேளை நீங்கள் கடனை திரும்பி தராமல் மரணித்து விட்டால் அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் வேதனையை கொடுத்து விடும். அதனால் நமக்கு ஒரு கர்ம வினைகளும் வந்துவிடும்.
நோய் விடுபடுதல்:
மேலும், கருட புராணத்தில் ஒருவருடைய நோய் பற்றி சொல்லப்படுகிறது. ஒருவருக்கு எந்த நோயாக இருந்தாலும் அதனை அவர்கள் கட்டாயமாக குணப்படுத்தக்கூடிய முயற்சியில் ஈடுபட வேண்டும். எதையும் பாதியில் விட்டு விடக்கூடாது. அதுவும் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
பகையை நிறுத்த வேண்டும்:
நீங்கள் உங்களுடைய எதிரி உடன் கொண்டுள்ள பகையை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கடுமையான பாதிப்புகளை கொடுக்கக்கூடும். காரணம், பகைமை வளர வளர எதிரிகள் உங்களை அழிக்க திட்டமிடுவார்கள் என்பதால் அவை உங்களுக்கு பிரச்சனையை கொடுக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |