நெருங்கியவர்கள் என்ன செய்தாலும் கண்டும் காணாமலும் போகக் கூடிய ராசிகள் யார்?
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஒருவர் எவ்வளவு தவறு செய்தாலும் அதை அவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறார்கள். அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்ன செய்தாலும் கண்டும் காணாமலும் போகக் கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்- கடகம்:
இவர்கள் நெருக்கமானவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதை அவர்கள் தெரியாமல் செய்திருப்பார்கள். பரவாயில்லை அடுத்தமுறை அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். சரியாக செய்து விடுவார்கள் என்று எடுத்துக் கொள்ளக்கூடிய பக்குவம் கொண்டு இருப்பார்கள்.
துலாம்- ரிஷபம்:
இவர்கள் நெருக்கமானவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. இதெல்லாம் சகஜம் தான். இனிமேல் இவர்கள் இப்படி செய்ய - வேண்டாம் என்று முடித்துவிடுவார்கள்.
தனுசு- சிம்மம்:
இவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஏதாவது தவறு செய்தால் நானும் நிறைய தவறுகளை செய்து திருத்திக் கொண்டது உண்டு. ஆதலால், தவறு செய்வது இயல்பு தான். அதை திருத்திக் கொண்டு விட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |