மிதுன ராசிக்காரர்களுக்கு கர்ம பலன்படி அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

By Sakthi Raj Jun 06, 2026 08:43 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். அப்படியாக, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்ம பலன்களையும் இருக்கிறது. அதில் மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை கர்ம பலன்படி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய கர்ம பலன்கள் படி வாழ்க்கையில் பணம் பணம் சேமிப்பில் எப்பொழுதும் ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். அதீத ஆசையால் இவர்கள் சில நேரங்களில் தேவை இல்லாத பணத்தை செலவழிக்க கூடிய நிலை உருவாகும். அதுவும் குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் மற்ற நிதி முதலீடுகளால் இவர்கள் பணத்தை இழக்க நேரலாம்.

இவர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் காதல் மலர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் அவை பெரும்பாலும் சிக்கலில் தான் முடியும். முதல் திருமணம் மற்றும் முதல் குழந்தை விஷயத்தில் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீர்கள்

வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீர்கள்

மிதுன ராசியை பொறுத்தவரை இவர்கள் இரும்புத்தொழில் செய்யலாம். அது இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கும். இவர்களுக்கு அடிக்கடி ஆன்மீகம் மற்றும் துறவு வாழ்க்கை செல்வதற்கான எண்ணம் இருந்தாலும் அவர்கள் இயல்பான வாழ்க்கையில் கவனம் செலுத்துவது நன்மை உண்டாகும்.

இவர்கள் தங்களுடைய பண வரவிருக்கும் மன அமைதிக்கும் சந்திர பகவான் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். அதனால், இவர்கள் மன குழப்பத்திலிருந்து விடுபடுவார்கள். மேலும், இவர்கள் திங்களூர் மற்றும் சோமங்கலம் போன்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது இவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைகிறது.

  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US