மிதுன ராசியினர் திருமண பொருத்தத்தில் கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்
ஜோதிட ரீதியாக மூன்றாவது ராசியான மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்க கூடியவர்கள். இவர்கள் எதையும் தீர ஆராய்ந்து யோசித்து செயல்பட கூடியவர்கள். அந்த வகையில், மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தமான நட்சத்திரம் மற்றும் பொருத்தமற்ற நட்சத்திரம் என்று பார்ப்போம்.
மிதுன ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, மற்றும் புனர்பூசம் உள்ளது. மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி நட்சத்திரம் பெரிய அளவில் ஒத்துப்போவதில்லை பாதிப்பை உண்டு செய்கிறது.
அதேபோல், பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் இவர்கள் தவிர்க்க வேண்டும். பூராடம் ஆகிய நட்சத்திரங்களும் இவர்களுக்கு பெரிய அளவில் ஒத்துப் போவதில்லை. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரைக்கு ஒத்துப்போவதில்லை.
உத்திர நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒத்துப்போவதில்லை. அதே போல், ரோகிணி நட்சத்திரம் மிதுனம் புனர்பூச நட்சத்திரனுடன் சேரும் பொழுது தேவையில்லாத மன உளைச்சல் வருகிறது.
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் இவர்கள் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
அதற்கு நாம் பயப்பட தேவையில்லை. அதற்குரிய பரிகாரங்களை செய்தும் நாம் சரி செய்து கொள்ளலாம் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள். அதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |