ஜேர்மன் முருகப்பெருமானுக்கு தேர்த்திருவிழா கொண்டாட்டம்
எங்கும் முருகன் எதிலும் முருகன்.அதாவது முருகனுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் பல நாடுகளிலும் பக்தர்கள் அதிகம்.முருகனுக்கு என்று சிறப்பான பிரசித்தி பெற்ற கோயில் கிடையாது.முருகன் கோயில் அனைத்துமே மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகம் புராணம் நிறைந்த கோயில்கள் ஆகும்.
அப்படியாக கடல் கடந்து ஓர் முருகன் ஆலயம்.அங்கு அவருக்கு தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஜேர்மனின்(Germany) குமர்ஸ்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில்.அங்கு முருகன் குறிஞ்சிக்குமரன் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஜேர்மன் நாட்டிலே வாழும் தமிழ் மக்களுக்கு ஆறுமுகத்தான் அருள் தேவை பட மலை அடிவாரத்தில் எளிய வடிவில் குறிஞ்சிக்குமரன் ஆலயம் 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிறகு 1996-ம் ஆண்டு மூன்று தேர்கள் உருவானது.
இந்த ஆலயமே ஜெர்மனியில் முதன்முதலில் சூரசம்காரம் தேர் வீதிஉலா என்று விழாக்களை கொண்டாடிய ஆலயமாக போற்றப்படுகிறது.
ஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத குறிஞ்சிக்குமரன், இவர்களோடு நவக்கிரகம், சனீஸ்வரர், பைரவர், நவவீரர்கள், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. உற்சவர்களாக சண்முகர், சிவலிங்கம், அம்பிகை, சந்தானகிருஷ்ணன், நாகபூஷணி, முப்பெருந்தேவியார், சிவகாமி சமேத ஆனந்த நடராஜர், சந்திரசேகரர் முதலான மூர்த்திகளும் உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் வருகின்ற 30ஆம் 31வது வருட மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
அதாவது குறிஞ்சிக்குமரன் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுகள் இவ்வருடம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்ததோடு அதன் வருடாந்த மஹோற்சவம் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த ஆலயத்தில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் இளைஞர்களே முன்னின்று திருப்பணிகளும், ஆலய நிர்வாகமும் செய்து வருவது தான்.
இந்த நிலையில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ள தேர்திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு குறிஞ்சிகுமரன் அருள் பெறுமாறு கோயில் சார்பாக வேண்டிக்கொள்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |