கொடிமரம் பின்னால் இருக்கும் விஷேச தகவல்
கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வது சாதரணமானது கிடையாது.ஒவ்வொரு இறைவழிபாட்டிற்கு பின்னாலும் ஒவ்வொரு புராணம் இருக்கும்.
மேலும் கோயிலுக்குள் நாம் பார்க்கும் அனைத்துமே நிச்சியம் பல காரணங்களோடு அமையப்பெற்று இருக்கும்.அதில் கொடிமரம் ஒன்று.
நாம் சுவாமி தரிசனம் செய்யும் முன் கோயிலுக்கு சென்ற உடன் நேராக கொடிமரம் அமைய பெற்றுஇருக்கும்.
அதை பார்த்து வணங்கிய பின் தான் நாம் பிற வழிபாடுகள் தொடங்குவோம்.அப்படியாக கொடிமரம் என்றால் என்ன?அவை எத்தனை விஷேசம் நிறைந்தவை என்பதை பற்றி இருப்போம்.
கொடிமரம் என்பது சுவாமி கருவறை எதிரிலும் பலிபீடம் அருகிலும் அமையப்பெற்று இருக்கும்.அதாவது கோயில்களில் எதாவது விஷேசம் என்றால் அந்த விஷேசத்தை தெரிவிக்கும் பொருட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றுவார்கள்.
அப்படி கொடி ஏற்றிய பிறகு தான் விஷேசம் நடக்கும்.ஆதலால் கொடிமரம் என்று பெயர்பெற்றது. இந்த கொடிமரத்தை சம்ஸ்க்ருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடிமரம் மூன்று பாகங்களை உடையது.
அடிப்பகுதியில் அகலமான மற்றும் சதுரமான பாகம், நடுப்பகுதியில் எண்கோண பாகம் மற்றும் மேல்பகுதியில் நீண்ட ருத்ரபாகம் என்ற மூன்று பகுதிகளால் ஆனது கொடிமரம்.
இதில் சதுர பாகம் பிரம்மனுக்கு உரியது. எண்கோண பாகம் விஷ்ணுவிற்கு உரியது. ருத்ர பாகம் சிவபெருமானுக்கு உரியது. கொடிமரமானது மூம்மூர்த்திகளை உணர்த்தும் ஒரு அடையாளமாகும். கோயில்களுக்கு இந்த கொடிமரம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
நமது முகுதுவடத் தண்டில் 32 எலும்பு வளையங்கள் அமைந்திருக்கும். அதுபோலவே கோயில் கொடிமரமானது 32 வளையங்களுடன் அமைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இராஜகோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் கொடிமரம் அமைக்கப்படும்.
இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக பதிமூன்று மீட்டர் இடைவெளி அமையும். கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகத்தை பூமிக்குள் இருக்கும்படி அமைப்பது வழக்கம். கொடிமரமானது இராஜகோபுரத்தை விட உயரம் குறைந்ததாகவும் கருவறை விமானத்திற்கு நிகரான உயரத்துடன் அமைக்கப்படும்.
கொடிமரமானது பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம், பலா, மா ஆகிய மரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. மரத்தினால் ஆன கொடிமரத்தை காப்பதற்காக அதன் மீது பித்தளை மற்றும் செப்புத்தகடுகள் பொருத்தப்படுகிறது.
நாம் சுவாமி தரிசனம் செய்து வெளியில் வரும் பொழுது கொடிமரம் முன் கொடிமரத்தின் முன்னால் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும் என்பது மரபு.
தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது அஷ்டாங்க நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது.
தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரமானது சைவம் வைணவம் திருத்தலங்களில் வெவ்வேறு வடிவங்களில் அமைக்க பெற்று இருக்கும்.
அதாவது சைவமான சிவன் கோயில்களில் நந்தியும், வைணவமான பெருமாள் கோயில்களில் கருடனும், அம்மன் கோயில்களில் சிம்மமும், முருகர் ஆலயங்களில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும் கொடிச்சின்னங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
திருவிழாவானது நிறைவுபெறும் நாளன்று கொடியானது இறக்கப்படும். இதற்கு துவஜாரோஹணம் என்று பெயர். ஆக கோயிலில் அமைய பெற்று இருக்கும் சிறிய கல் இருந்து பெரிய தூண் வரையிலும் பல விஷேசம் நிறைந்தவை.
அவற்றிக்கு பின்னாளில் ஒவ்வொரு வரலாறு அமையப்பெற்று இருக்கும்.அவை எல்லாமே தெய்விக சக்திகள் நிறைந்தவையாகவே இருக்கிறது.
ஆதலால் நாம் கோயிலுக்கு சென்று எல்லாவற்றையும் சரியாக கவனித்து வழிபாடு செய்து நம் வாழ்வில் அனைத்து நலமும் பெறுவோமாக.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |