சிவலிங்க வடிவில் சனி பகவான்.. எங்கு இருக்கிறார் தெரியுமா?

By Sakthi Raj Mar 13, 2026 08:37 AM GMT
Report

நாம் சனி பகவானை காகத்துடன் நமக்கு அருள்பாலிப்பதை போல் தான் பார்த்திருப்போம். ஆனால் வேலூர் அருகில் இருக்கக்கூடிய எரிக்குப்பம் என்கின்ற ஒரு இடத்தில் சனி பகவான் யந்திரம் பொருந்திய நிலையில் சிவலிங்க வடிவில் நமக்கு அருள் பாலிக்கிறார்.

இவரை நாம் சனி ஹோரையில் வழிபாடு செய்தால் சனி தோஷம் மற்றும் சனி பகவானால் ஏற்படக்கூடிய தீய தாக்கங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதைப்பற்றி பார்ப்போம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சனி பகவானுக்கு கோவில் ஒன்றை கட்டினார். சனி ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்பதால் சிலையை சிவலிங்கத்தின் பாணம் மேல் உருவாக்கினார். ஆனால் காலப்போக்கில் அந்த கோவில் சிதலமடைகிறது. பிறகு திறந்த வெளியில் வழிபாடு நடந்தது.

சிவலிங்க வடிவில் சனி பகவான்.. எங்கு இருக்கிறார் தெரியுமா? | Erikkuppam Enthira Saneeswaran Temple

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

அதனை தொடர்ந்து பிற்காலத்தில் யந்திரத்துடன் செய்யப்பட்டு "யந்திர சனீஸ்வரராக" ஆக பெயர் பெற்றார். அதாவது தாமரை பீடத்தில் மீது இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் லிங்க வடிவில் மூலவர் இருக்கிறார். சிலையின் மேல் பகுதியில் சூரியனும் சந்திரனும் நடுவில் காகமும் உள்ளன. அறுகோண வடிவில் ஷட்கோன யந்திரம் நடுவில் சனி பகவான் இருக்கிறார்.

அதில் நமசிவாய எனும் ஐந்து எழுத்து மந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு உரிய வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த யந்திரம் பொருந்திய நிலையில் சிவலிங்க வடிவில் இருக்கும் சனி பகவானை சனிக்கிழமையில் சனி ஹோரை நேரத்தில் இவருக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் அபிஷேகம், கோ பூஜை, யாகசாலை நடக்கிறது.

சிவலிங்க வடிவில் சனி பகவான்.. எங்கு இருக்கிறார் தெரியுமா? | Erikkuppam Enthira Saneeswaran Temple

நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பொருட்கள் என்ன தெரியுமா?

நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பொருட்கள் என்ன தெரியுமா?

மேலும், சனி பகவானுடைய தந்தையான சூரியன் இங்கு தீர்த்தமாக இருக்கிறார். சூரிய பகவானுக்கு "பாஸ்கரன்" என்று ஒரு பெயர் உண்டு. ஆதலால் அந்த தீர்த்தத்தை "பாஸ்கர தீர்த்தம்" என்று அழைக்கின்றனர். அந்த தீர்த்தத்தை சனீஸ்வரர் பிரசாதமாக கொடுக்கின்றனர்.

அந்த தீர்த்தத்தை குடிப்பவர்களுக்கு சனி தோஷம் மற்றும் சூரிய தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. ஏழரை சனி, அஷ்டமத்து சனி, நீண்ட ஆயுள் எதிரிகள் தொல்லை வாழ்க்கையில் தடைகள் இவை எல்லாம் விலக இவரை வந்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக நம்பிக்கை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US