உங்களின் சுண்டு விரல் இப்படி இருக்கா? நிச்சயம் பணக்காரர் யோகம் உண்டாம்

By Yashini Apr 14, 2025 07:01 AM GMT
Report

பொதுவாக, கை ரேகைகளை பொறுத்து வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் என்ற பலரும் ஜோதிடம் பார்த்து தெரிந்துகொள்கின்றனர்.

அந்தவகையில், கையில் இருக்கக்கூடிய சுண்டு விரல் அமைப்பு மற்றும் நீளம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். 

நீளமான சுண்டு விரல்

சிலருக்கு சுண்டு விரல் மோதிர விரலுக்கு மேல் கோடு வரை தாண்டி இருப்பின், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளால் சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய உயரத்தை அடைவார்கள்.

இவர்கள் எந்த ஒரு வேலையிலும் மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் செயல்படுவார்கள். இதனால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் ஆவார்கள். 

சிறிய சுண்டு விரல்

மோதிர விரல் மேல்கோட்டிற்கும், சுண்டு விரல் உயரத்திற்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இருப்பின் அவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்களின் சுண்டு விரல் இப்படி இருக்கா? நிச்சயம் பணக்காரர் யோகம் உண்டாம் | Get Lucky According To Your Little Finger Length

கடின உழைப்பு இவர்களிடம் நிறைந்திருக்கும் ஆனால் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவர்கள் பிறர் சொல்வதை அதிகம் பின்பற்றக் கூடியவர்களாகவும், தங்களின் கருத்துக்களை பிறரிடம் விளக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய நபர்களாகவும் இருப்பார்கள்.

மோதிர விரல் மேல்கோட்டை தொடும் சுண்டு விரல்

ஒருவரின் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை சமமாக இருப்பின் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

மேலும், எந்த ஒரு வேலை,தொழில் செய்தாலும் அதன் மூலம் பெரிய அளவில் புகழடைவார்கள்.

இந்த நபருக்கு அமையக்கூடிய துணையுடன் இணக்கமும், சமத்துவமும் சிறப்பாக இருக்கும்.

சுண்டு விரலின் மேல் கணு நீண்டு இருத்தல்

ஒருவரின் கை சுண்டு விரலில் உள்ள மூன்று கணுக்களில் மேலே உள்ள கணு நீளமாக இருந்தால், தங்களை விட மற்றவர்கள் குறித்து அதிக அக்கறையுடன் இருப்பார்கள்.

பிறரிடம் மிகவும் குறைவாக பேசக்கூடிய இவர்கள், தங்களின் கடின உழைப்பால் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்.

உங்களின் சுண்டு விரல் இப்படி இருக்கா? நிச்சயம் பணக்காரர் யோகம் உண்டாம் | Get Lucky According To Your Little Finger Length

மேலும், தங்களை குறித்து மிக குறைவாகவே சிந்திப்பார்கள்.

சுண்டு விரலின் நடு கணு நீண்டு இருத்தல்

சுண்டு விரலின் இரண்டாவாது அல்லது நடு கணு நீண்டு இருப்பின், அவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள்.

பிறரை குறித்து தவறான எண்ணம் கொண்டவர்கள் இல்லை. எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பார்கள்.

மேலும், பிறர் இவர்களுக்கு கெட்டதை செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்ய நினைப்பார்கள்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US