புரட்டாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோவில்.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அதிலும் திருவண்ணாமலையில் அமாவாசை, பௌர்ணமியில் நடைபெறும் வழிபாடுகள் மிகுந்த சிறப்புப் பெற்றது.
அண்ணாமலையார் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் கிரிவலம் மேற்கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
திருவண்ணாமலையில் மலையே அண்ணாமலையாராக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வதால் வேண்டுவது நடப்பதாக நம்பிக்கை.
இந்நிலையில் புரட்டாசி முதல் நாளான இன்று பௌர்ணமி நாளாக இருப்பதால் பல்லாயிரம் மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் செல்ல உகந்த நேரமாகக் காலை 11 மணி முதல் நாளை காலை 8 மணி வரை செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள உள்ளூர் மக்கள் உட்பட வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |