இந்த ராசியில் பிறந்த பெண்கள் தான் தந்தையின் செல்ல பிள்ளைகளாம்
என்னதான் நம்முடைய பிறப்பு பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சிலருக்கு பெற்றோர்களுடனே ஒரு சரியான புரிதலும் உறவு முறையும் இல்லாத ஒரு மனக்கசப்புகளும் இருக்கிறது. அப்படியாக ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் அவர்களுடைய ராசி அமைப்பின்படி அவர்களுடைய தந்தையின் செல்ல பிள்ளைகளாக இருப்பார்களாம்.
அதனால் அவர்கள் என்ன செய்தாலும் அதை தவிர்க்க முடியாத அளவிற்கு தந்தையின் அன்பை இந்த குழந்தை பெற்று இருக்க கூடிய பாக்கியம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக எந்த ராசியில் பிறந்த பெண்கள் தந்தையின் செல்ல பிள்ளைகளாக இருக்கக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியில் பிறந்த பெண்கள் எல்லோரும் தன்னுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஒரு ஆளுமை இயற்கையாகவே இவர்களிடத்தில் இருக்கும். அதைப்போல் இவர்களுக்கு தந்தை தான் மிகவும் பிடித்த நபராக இருப்பார்.
இவர்களுடைய தந்தைக்கும் இவர்தான் உலகமாகவும் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும். ஆதலால் வீடுகளில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் தந்தையின் முழு ஆதரவையும் அன்பையும் பெறக்கூடிய குழந்தையாக இந்த கடக ராசியில் பிறந்த பெண்கள் இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் அமைதியான மற்றும் எதையும் தீர ஆலோசித்து செயல்படக்கூடிய ஒரு தன்மை பெற்றிருப்பார்கள். இவர்களுடைய குணமானது இவர்களுடைய தந்தைக்கு மிகவும் பிடித்தமான ஒரு குணமாக இருக்கும்.
சில நேரங்களில் மகர ராசியினர் அவர்களுடைய தந்தைக்கு ஆலோசனை செய்யக்கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்டு இருப்பார்கள். ஆக இவர்களுடைய தந்தைக்கு மகள் பேச்சை மீறி எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவிற்கு இந்த மகர ராசி பெண்ணினுடைய அன்பும் அறிவும் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்த பெண்கள் தந்தை இடம் மட்டுமல்ல குடும்பத்தினருடைய செல்லப்பிள்ளை என்றே சொல்லலாம் . குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் இந்த கும்ப ராசியில் பிறந்த பெண் பிள்ளைகள் வருகைக்காக எல்லோரும் காத்திருப்பார்கள்.
அதேபோல் கும்ப ராசியில் பிறந்த பெண்கள் இருக்கும் இடத்தில் எப்பவும் கலகலப்பாக இருக்கக்கூடிய நிலை இருக்கும். எல்லோரையும் மனக்கவலைகளில் இருந்து விடுவிக்கக் கூடிய ஒரு அற்புதமான ஆற்றல் இந்த கும்ப ராசியில் பிறந்த பெண்களிடம் இருப்பதால் இவர்களுடைய தந்தையின் செல்லப் பிள்ளைகளாக எப்பொழுதும் இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |