பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க உதவும் வழிபாடு
இந்த காலத்தில் பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் ஆகியோருக்கு அதிகளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தினமும் செய்திகளில் பல விடயங்களை இதுபோல கேள்விப்பட்டிருப்போம்.
இதனால் அனைத்து பெற்றோர்களுக்கும் நம் பிள்ளைகளுக்கு இதுபோல ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பயம் இருக்கும்.
அந்தவகையில், பெற்ற பிள்ளைகளுக்கு பாதுகாவலாக இருக்க வாராகி அம்மனை எப்படி வழிபடுவது என்று பார்க்கலாம்.
வாராகி அம்மன் வழிபாடு
இந்த வழிபாட்டை பஞ்சமி நாள் வரும் அன்று ஆரம்பிப்பது மிகவும் நல்லது.
தொடர்ச்சியாக 27 நாட்கள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்நாட்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதற்காக நம் வீட்டில் வராஹி அம்மன் சிலை அல்லது படம் இருந்தால் போதும். இல்லையென்றால் ஒரு தீபத்தை ஏற்றி வழிபடு செய்யலாம்.
இந்த வழிபாட்டை 27 நாட்களும் மாலை 6:30 மணியிலிருந்து 11:55 மணிக்குள் செய்ய வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படத்திற்கு முன்பு வடக்கு திசை பார்த்தவாறு ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றவும்.
அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு பிடித்தமான பால், பானகம், கற்கண்டு, மாதுளம் பழம், கிழங்கு வகைகள் போன்ற ஏதேனும் ஒன்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
நெய்வேத்தியம் வைத்த பிறகு கீழ்வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கூற வேண்டும்
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ
ஸ்தம்பே ஸ்தம்பிணி நமஹ
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் ஹூம்பட் ஸ்வாஹா
இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் பிள்ளைகளுக்கு வாராகி அம்மன் பாதுகாவலாக திகழ்ந்து எந்தவித பிரச்சனைகளும் அணுகாமல் பார்த்துக் கொள்வாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |