மனிதர்களுக்கு செல்வம் மூன்று வகைகளில் வரும்
மனிதனாக பிறந்துவிட்டால் அவன் வாழ செல்வம் என்பது மிக அவசியம்.அப்படியாக நாம் என்னதான் நம்முடைய உழைப்பை போட்டாலும் கடவுளின் அருட்பார்வையாலே நமக்கு செல்வம் வந்து சேரும்.அப்படியாக செல்வம் என்பது நம் வாழ்க்கையில் மூன்று வகையில் வருகிறது.அதை பற்றி பார்ப்போம்.
1. லட்சுமி செல்வம்
2. குபேர செல்வம்
3. இந்திர செல்வம் எனப்படும்.
லட்சுமி செல்வம்
இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும். அதாவது லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மனம் கலக்கத்தில் இருக்கமாட்டார்கள்.இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் சக உயிர்களையும் சமமாக மதித்து நடத்துவார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழு தலைமுறையையும் தாண்டி நிற்கும் இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும்.
குபேர செல்வம்
ஒருவர் வாழ்க்கையில் எத்தனை நிதி கஷ்டத்தில் இருந்தாலும் அவர்கள் குபேரனை மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள்
. திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும். எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.
மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.
இந்திர செல்வம்
இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நன்மைகள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |