தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட யாரை வழிபடவேண்டும்?
"கடன் பட்டார் நெஞ்சும் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்பார் கம்பர்.ஒருவர் கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதியே இருக்காது.மனம் சலனம் பட்டுக்கொண்டே இருக்கும்.
இரவில் படுத்தால்உறக்கம் வராது. நாளை பொழுது எப்படி சமாளிக்க போகின்றோம்.இந்த கடனில் இருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்று தான் அனைவரது வேண்டுதலாக இருக்கும்.
அப்படியாக தீராத மன உளைச்சல் தரும் கடனில் இருந்து எப்படி விடப்பட வேண்டும்.கடன் பிரச்சனை தீர நாம் சொல்லவேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
நம்முடைய கிரக நிலை சரி இல்லாமை காரணமாகவே கடன்தொல்லைகள் ஏற்படுகின்றன. கடன் தொல்லைஅகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில்முன்னேற முடியும்.
நமது கடன்களும், நீங்க அன்னபூரணியை வழிபட வேண்டும். அன்னபூரணி எந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வரைந்து கொள்ள வேண்டும். வளர் பிறையில் ரோகிணி, மிருகசீரிடம், உத்திரம், சுவாமி இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த எந்திரத்தை பூஜையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
முதலில் அபிஷேகம் செய்து, தூபதீபம் காட்டி விட வேண்டும். நிவேதனப் பொருட்களாக தேங்காய், பழம், சர்க்கரைப் பொங்கல், திராட்சை போன்றவை இருக்கலாம்.
செண்பகம், சம்பங்கி, மல்லிகை, பவளமல்லி போன்ற பூக்களில் ஏதாவது ஒரு பூவால் அர்ச்சிக்கலாம். இதற்கான மூலமந்திரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே அன்னபூர்ணே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா."
மேற்கண்ட மந்திரத்தை தினமும் 51 முறை உச்சரித்து வர வேண்டும். இவ்வாறு 24 நாட்கள்உச்சரித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
நோய் நொடிகள் இருந்தாலும் விலகும்.நிம்மதியான வாழ்வு வாழ வழி வகுக்கும்.மனதார நம்முடைய கடன் பிரச்சனை விலகும் என்று முழுமனதோடு இத மந்திரம் சொல்லி வழிபட நிச்சயம் நல்லதோர் தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |