2026: பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமான் 12 ராசிகளுக்கும் சொல்லும் செய்தி என்ன?
பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் புகுந்த நாளாக இருக்கிறது. இன்றைய தினம் தான் முருகப்பெருமான் திருமண வைபவம் நடைபெற்றது. ஆதலால், இந்த நாளில் நாம் முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கின்ற தடைகள் மற்றும் திருமண தோஷம் யாவும் விலகும்.
அப்படியாக பங்குனி உத்திரத்தன்று 12 ராசிகளுக்கும் முருகப்பெருமான் சொல்லக்கூடிய செய்தி என்ன என்பதை பற்றி பார்ப்போம். மேஷ ராசியினருக்கு முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தன்று கந்த சுவாமி கோலத்தில் அவர்களை தரிசனம் செய்வதற்கு அழைக்கிறார்.
இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சுவாமிமலை முருகப்பெருமானை தங்களுடைய குருவாக பாதித்து வழிபாடு செய்ய துவங்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள் யாவும் விலகும். அடுத்ததாக கடக ராசியினருக்கு முருகப்பெருமான் கொடுக்கக்கூடிய செய்தி இவர்கள் சில நாட்களாக கஷ்டங்களை சந்தித்து விட்டார்கள்.

ஆதலால் இவர்கள் முருகப்பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யும் பொழுது இவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றமும் வசந்த காலமும் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தனுசு ராசியினர் கடந்து சில தினங்களாக அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது.
எதிலும் பதட்டம் கொள்கிறார்கள். நாம் தோல்வி அடைந்து விடுவோமோ என்று அச்சம் மட்டுமே அவர்களை சூழ்ந்து இருக்கிறது. அதனால் அவர்கள் முருகப்பெருமானை மறந்து விட்டார்கள்.
அவர்கள் கட்டாயம் வாழ்க்கை நல்ல முறையில் செல்லும் என்று முருகப்பெருமானை நம்பி சரணடைய வேண்டும் என்று அவர்களுக்கு இந்த பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமான் கொடுக்கக்கூடிய முக்கிய செய்தியாக இருக்கிறது.
மேலும், 12 ராசிகளுக்கும் முருகப்பெருமாள் டாரட் வாசிப்பு வழியாக என்ன செய்து சொல்கிறார் என்பதை பற்றி நம் முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |