தலைக்கு மேல் கடன், எதிரிகள், வம்பு வழக்கு தீர இந்த நாள் திருச்செந்தூர் சென்று வாருங்கள்
மனிதர்களுக்கு துன்பம் என்பது எப்படி வருகிறது என்று தெரியாது. ஆனால், கண் இமைக்கும் முன்பு அடுக்கடுக்காக மிகப்பெரிய அளவில் நம் தலைக்கு மேல் சென்றுவிடும். அது ஒரு மனிதனுக்கு கடனாக, எதிரிகள் தொல்லை, வம்பு என்று எல்லாவற்றுக்கும் பொருத்தும்.
இப்பொழுது தான் பிரச்சனை துவங்கியது போல் இருக்கும், ஆனால் மிகப்பெரிய அளவில் நம்மை அது பாதிக்க செய்து விடும். அந்த வகையில், இவ்வாறான பிரச்சனையில் இருந்து விடுபட குறிப்பிட்ட இந்த நாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு நல்வழி பிறக்கும். திருச்செந்தூரில் வீற்றிருக்கக் கூடிய முருகப்பெருமான் ஞானத்தின் அடையாளமாக இருக்கிறார்.

எதிரிகளை அடியோடு வீழ்த்தக்கூடிய சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறார். மேற்கண்ட சொன்ன விஷயங்கள் ஒருவர் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு கொடுக்கிறது என்றால் அவர்கள் பூச நட்சத்திர நாளில் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய நல்ல மாற்றங்களை காணலாம்.
பூச நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று முதலில் கடலில் நீராடி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பிறகு கோவிலை பதினாறு முறை சுற்றி வலம் வர வேண்டும். பிறகு கடலுக்கு வந்து கடலை விழுந்து வணங்க வேண்டும்.
அதோடு கடல் தண்ணீரை மூன்று முறைதொட்டு கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வர வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் பிறக்கும், நீண்ட நாள் பிரச்சனைகள் இருந்து விடுபடுவதற்கு முருகப்பெருமான் நல்வழி காட்டுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |