உண்மை காதலுக்கு முன் வந்து உதவி செய்த அம்மன்
உண்மை யார் பக்கம் இருக்கிறதோ அதற்கு இந்த உலகமே துணை நின்று அவர்களை காப்பாற்றும். அதே போல் இரு காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கலை போக்க அம்மன் முன் வந்து உதவி செய்து இருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
சேர மன்னன் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டு இருந்த பொழுது, அரசியின் மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போனது. அந்த வேளையில் காவலுக்கு இருந்த காவலாளி மேல் சந்தேகம் கொண்டு அவரை சிறையில் அடைத்தார்கள்.
அந்த காவலாளிக்கு அரசியின் தோழிகளாக இருந்த ஒரு பெண் காதலியாக இருந்தாள். தன் காதலன் சிறைக்கு சென்ற செய்தி அறிந்த காதலி, அரசியிடம் ஓடிச்சென்று நான் தான் தவறு செய்தேன். நான் தான் உங்கள் காதணியை திருடினேன்.
என்னை சிறை வையுங்கள் எந்த தவறும் செய்யாத அவர், அப்பாவி விடுவித்து விடுங்கள் என்றாள். காதலியின் சர்ச்சையால் வழக்கு அரசபை முன்பு வந்தது. அப்பொழுது காவலாளியும் காதலனும் இரு சேர நிற்க வைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது காவலாளியோ, அரசே என் மீது தான் தவறு. என்னை சிறை வையுங்கள் என்றான். அவனின் காதலியோ அரசே இல்லை, தவறு என் மீது, என்னை சிறையில் இடுங்கள் என்று மாறி மாறி பேசி கொள்ள அரசருக்கு முடிவு எடுப்பதில் ஒரே குழப்பம் ஏற்பட்டது.
பிறகு, அரசபையில் அமைச்சர் ஒருவர் ஆலோசனைபடி உண்மையை கண்டுபிடிக்க ஒரு வழி கண்டு பிடித்தார்கள். அதாவது, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி முன் யார் உண்மையான குற்றவாளி என்று கண்டுபிடிக்க சத்தியம் செய்யச்சொல்வோம் என்று முடிவு செய்தனர்.
காரணம், அந்த கோயிலில் பொய்களுக்கு இடம் இல்லை. பொய் சத்தியம் செய்பவர்களை அம்மன் உடனே தண்டித்து விடுவாள் என்பது நம்பிக்கையாக இருந்தது. அதன் அடிப்படையில், அந்த காவலாளியும், அவன் காதலியும் கோயில் குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்.
அந்த வேளையில், ஒரு பெண் ஓடி வந்தாள். அரசரை பார்த்து அரசே, அரசியின் துணி சலவைக்கு எடுக்கும் பொழுது அதில் காதணி இருப்பதைக் கண்டேன்'. அப்பொழுது, ஒரு குரல் உடனே இந்த காதணியை என் கோயிலில் நிற்கும் அரசனிடம் சென்று கொடு என்று சொல்லியது.அது கண்டிப்பாக சாமுண்டி தேவியின் குரலாகத்தான் இருக்கும் என்று ஓடி வந்தேன் என்றாள்.
அதை பார்த்த மன்னன் தன் தவறை எண்ணி மனம் வருந்தினான். பிறகு அரசனும் அரசியும் காவலனிடமும் அவனின் காதலியிடமும் மன்னிப்பு கேட்டனர். பிறகு அரசி அவரின் அந்த இரண்டு காதணிகளை சாமுண்டி தேவி அம்பாளுக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |