தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க.. இந்த தெய்வங்களை வணங்குங்கள்
தேர்வில் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்..
தேர்வில் வெற்றி
நாமக்கல்லில், பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ஹயக்ரீவர் லட்சுமியுடன் வடக்கு பார்த்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரை வேண்டி கொண்டால் தேர்வில் வெற்றி நிச்சயம்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கே குரு இந்த ஹயக்ரீவர்தான் என்பது கூடுதல் தகவல்.
திருவாரூரில் குள கரையில் அமைந்துள்ள இங்க் பிள்ளையார் ரொம்ப ஸ்பெஷல். தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் மீதமுள்ள இங்க்கை இந்த தலத்தில் விநாயகர் மீது அபிஷேகம் செய்து வருகின்றனர். இதன் மூலம் தேர்வில் வெற்றி நிச்சயம் என நம்பப்படுகிறது.
கை மேல் பலன்
திருநெல்வேலி, டவுனில் நெல்லையப்பர் கோவிலில் நவகிரகத்தில் புதன் பகவான் வித்தியாசமாக வடக்கு திசையில் அமர்ந்துள்ளார். ஜாதகத்தில் புதனால் ஏற்படுகின்ற படிப்பு குறைபாட்டை நீக்குகிறார். இவரை புதன்கிழமை தோறும் வழிபடுவது சிறப்பு.
கூத்தனூரில் சரஸ்வதிக்கு என தனி கோவில் உள்ளது. இங்கு சரஸ்வதி தேவி கையில் வீணையுடன் புத்தகத்தோடு காட்சி தருகிறார். இங்குள்ள சரஸ்வதியை பூஜை வழிபாடு செய்து வணங்க கல்வி அறிவு பெருகும். மேலும், கலைவாணியை புதன்கிழமைதோறும் வெள்ளை தாமரை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
முருகனை செவ்வாய்க்கிழமை வில்வ அர்ச்சனை செய்வதன் மூலம் ஞானம் கிட்டும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி அல்லது புதனை நினைத்து வணங்கி புதன்கிழமை தோறும் பாசிப்பயிறை வேகவைத்து சாப்பிட்டு வர மாணவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.