குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Apr 30, 2025 01:30 PM GMT
Report

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் கம்மவார் பாளையத்திற்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோவிந்த பாடி குரு பகவான் திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமானே குரு பகவானாக காட்சியளிக்கின்றார்.

விஷ்ணுவின் கூர் மழுங்கிய சக்கராயுதத்தை மீண்டும் கூர்மையானதாக மாற்றிக் கொடுத்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலமும் இதுவே. கோவிந்தன் சிவபெருமானைப் பாடித் துதித்த தலம் என்பதால் கோவிந்த பாடி என்றிருந்தது காலப்போக்கில் மருவி கோவிந்தவாடி என்றாகிவிட்டது. இங்கு தட்சிணாமூர்த்தியே வழிபடு தெய்வமாக இருப்பதனால் மக்கள் குரு கோயில் என்று அழைக்கின்றனர்.

அனைத்து கிரகதோஷமும் அன்றே போக்கும் சித்திரவாடி நரசிம்மர் கோவில்  

அனைத்து கிரகதோஷமும் அன்றே போக்கும் சித்திரவாடி நரசிம்மர் கோவில்  

கோவில் வரலாறு

கோவிந்தவாடி திருக்கோயில் முதலில் பௌத்தர்களின் மடாலயமாக் இருந்தது. புத்த நிலை அடைந்த துறவியான, ஆமை மீது அமர்ந்து வரும்  அவலோகதீச்வரர்  கோயிலாக இருந்துள்ளது.  எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் காலத்தில் சிவன் கோவிலாக உருவெடுத்தது.

பதினான்காம் நூற்றண்டிற்குப் பிறகு இங்குக் கோவிந்தன் கோயிலும் இணைக்கப்பட்டுள்ளது. சைவ வைணவ இணைப்புடைய திருக்கோவிலாக இக்கோவில் விளங்கினாலும் பழைய பெயரால் குரு கோயில் என்றே அழைக்கப்படுகிறது.   

குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில் | Govindavadi Guru Temple

கோயில் அமைப்பு

கோயில் கருவறையில் ஆறடி உயரத்தில் குரு பகவான் என்ற தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கின்றார். இவருக்குப் பக்தர்கள்  தேங்காய் மூடியின் நெய்த் தீபம் ஏற்றுகின்றனர்.  குரு பார்வை வேண்டும்,  வியாழ நோக்கம் வர வேண்டும் என்ற நினைக்கும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து குரு பகவானைத் தொடர்ந்து  வழிபட்டு திருமணத் தடை நீங்கும்.  நல்ல இல்லற வாழ்க்கை அமையும். பதவி உயர்வு, தொழிலில் மேன்மை ஆகியவற்றிற்கும் குரு பகவானே அதிபதியாக விளங்குகின்றான்.

 கதை 1

சமண பௌத்த சமயங்கள்  அழிக்கப்பட்டதும் இக்கோயில்கள் இருந்த இடங்களில் சைவ வைணவக் கோயில்கள் வரும்போது கூடவே ஒரு ஸ்தல புராணக் கதையும் எழுதப்படும். இக்கதைகளில் வடநாட்டு ரிஷிகள், தேவர், அசுரர், மும்மூர்த்திகள் இடம்பெறுவர். இவற்றில் தமிழக கதை மாந்தர்கள் இடம் பெறுவதில்லை.

இந்தியா முழுக்க இம்மாற்றம் ஏழாம், எட்டாம்  நூற்றாண்டுகளில் தோன்றியது. அக்காலகட்டத்தில் தான் வடக்கே புராணங்கள் எழுதப்பட்டன. அவை கௌதம் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றின.  

கதை

அங்கீக முனிவருக்கும் வாசுதாவுக்கும் ஏழாவது குழந்தையாகக் குரு பகவான் பிறந்தார். தேவர்களின் குருவாக இவர் விளங்கினார். (இவரது மனைவி தாராவை சந்திரன் காதலித்தான். சந்திரனுக்கும் தாராவுக்கும் புதன் பிறந்தான். 

புதன் புத்திகாரகன். இதனால் புதனும் குருவும் பகை கிரகங்களாக விளங்குகின்றனர். ஆனால் குருவும் சந்திரனும் இணைந்து ஜாதகருக்குக் குருச்சந்திர  யோகம் வழங்குகின்றனர்.) இவருக்கு கட்டப்பட்ட கோயில் தான் இக்கோயில். குரு தி திசை நோக்கி த்டசினா (தெற்கு) மூர்த்தியாக (தெய்வம்) விளங்குகிறார்.  

குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில் | Govindavadi Guru Temple

கதை 2

குபன் என்ற அரசன் ததீசி என்ற முனிவரோடு பகை கொண்டிருந்தான்.  மன்னன் திருமாலிடம் சென்று தன்னை அந்த முனிவரின் கோபத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்டினாரன். திருமால் தன்னுடைய சக்கராயுதத்தை முனிவரின் மீது பிரயோகித்தார். ஆனால் முனிவரின் வஜ்ரம் பாய்ந்த உடலை திருமாலின் சக்கராயுதத்தால் அறுக்க இயலவில்லை.

சக்கராயுதம் கூர் மழுங்கிப் போனது. உடனே திருமால் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னுடைய சக்கராயுதம் மீண்டும் கூர்மை பெற வேண்டும் என்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார்.   திருமால் கோவிந்த வாடிக்கு வந்து  லட்சுமி பிராட்டியா ரோடு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவ தியானத்தில் மூழ்கிப் போனார். சிவபெருமான் இவருக்கு காட்சியளித்து கூர்மையான சக்கராயுத்தை வழங்கினார்.

மகனை அசுரர்களிடம் இருந்து மீட்ட குரு பகவான்

மகனை அசுரர்களிடம் இருந்து மீட்ட குரு பகவான்

கதை 3

திருமாலின் சக்கராயுதம் மழுங்கிப் போனபோது அதை வைத்துக் கொண்டே 'இனித் தன்னால் தன் எதிரிகளைக் கொல்ல இயலாது' என்ற நிலையில் வருத்தத்துடன் இருந்தார். அவ்வமயம் தேவர்கள் அவருக்கு ஓர் அறிவுரை கூறினர்.   ஒருமுறை சலந்தாசுரன் தேவர்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

உடனே சிவபெருமான் தன் கால் பெரு விரலால் பூமியில் ஒரு வட்டம் வரைந்தார் . அந்த வட்டம் சக்கராயுதமாக உருப்பெற்று அவர் கைகளில் வந்து சேர்ந்தது. அந்த சக்கராயுதத்தை எறிந்து அசுரனைக் கொன்றார். அந்தச் சக்கராயுதத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெறுங்கள் என்று தேவர்கள் திருமாலுக்கு அறிவுரை கூறினர்.    

காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவன் சிவபெருமானைத் திருமால் சந்தித்து அவரிடம் இருக்கும் சக்கராயுதத்தை தந்து உதவுமாறு தவம் இருந்தார். தன் உடம்பு முழுக்க 11 இடங்களில் விபூதி பூசி ருத்ராட்ச மாலை அணிந்து தினமும் குளிப்பதற்காக தனியாகத் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் குளித்து முறைப்படி சிவ பூஜையை திருமால் செய்து வந்தார்.

இவருடைய தவத்துக்கு மனமிரங்கிய சிவபெருமான் பெருமாளுக்கு பிரதட்சணமாகி தன்னிடம் இருந்த சக்கராயுதத்தை வழங்கினார். எனவே இத்தலத்தில் இருவருக்கும் கோயில் உள்ளது.

குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில் | Govindavadi Guru Temple

கோவில் அமைப்பு

கோவிந்த வாடியில் ஒரே விமானத்தின் கீழ் இரண்டு கருவறைகள் இருக்கின்றன. ஆதியில் இருந்த  தெற்கு நோக்கிய கருவறையில் குரு பகவான் எழுந்தருளியுள்ளார். அதன் பின்னர் உருவான கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்கம் இடம்பெற்றுள்ளது. தற்போது  ஒரே விமானத்தின் கீழ் சிவபெருமான் தனியாகவும் தட்சிணாமூர்த்தி தனியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு தட்சிணாமூர்த்தியே சிவபெருமானாக எழுந்தருளியுள்ளார் என்பதற்கு காரணம் அவர் நெற்றியில் நெற்றிக்கண்ணும் தலையில் இளம்பிறையும் கங்கையும் உள்ளன. மேலும் தட்சிணாமூர்த்திக்கு இருப்பது போல பின்புறம் கல் ஆலமரம் கிடையாது. 

பின்புலம் மலை போல காணப்படுகின்றது.  வலது கரத்தில் சின் முத்திரை காட்டியும் இடது கரத்தில் சுவடி ஏந்தியும் குருபகவான் காட்சி தருகின்றார்.  இவரே இங்கு சிவபெருமானாகவும் இருப்பதால் ஐப்பசி மாதம் நடக்கும் அன்னாபிஷேகம் இங்கிருக்கும் கைலாசநாதருக்கு நடப்பது கிடையாது. குருபகவானுக்கே நடைபெறும்.   

குருவின் தோற்றம்

குரு பகவான் கருவறையில் ஆறடி உயரத்தில் ஆமையின் மீது அமர்ந்திருக்கின்றார். அந்த ஆமையை அஷ்ட திக் கஜங்களும் பஞ்ச நாகங்களும் ஒரு சிங்கமும் எட்டு திசை தேவர்களும் தாங்கியுள்ளனர். இத்தகைய தோற்றத்தில் இங்கு மட்டுமே குருபகவானைப் பார்க்கலாம்.  குருபகவானின் காலடியில் அறியாமையின் சின்னமாக விளங்கும் முயலகன் வடக்கு நோக்கி இருப்பது இயல்பு. ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் அவன் இடது பக்கம் பார்த்து இருக்கின்றான்.  

குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில் | Govindavadi Guru Temple

விபூதி காவடி

சிவபெருமானாக தட்சிணாமூர்த்தி இருப்பதனால் இங்கு பக்தர்கள் தட்சிணாமூர்த்திக்கு விபூதி காவடி எடுக்கின்றனர். கைலாசநாதரருக்கு அல்ல. அவர் பிற்சேர்க்கை என்பது குருவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் தெளிவாகின்றது. குரு பகவான் ஜனகாதி முனிவர்களுக்கு பாடம் நடத்தும் தோற்றத்தில் இல்லை.

வழிபாட்டின் பலன்

கோவிந்தன் துதித்த சிவபெருமானும் தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியிருக்கும் கோவிந்தபாடி குரு கோவிலலுக்கு வந்து மூவரையும் தொடர்ந்து வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும். உயர் பதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும்.

குருவே போக காரகன் மற்றும் புத்ரகாரகன் என்பதால் தம்பதிகளுக்கு தாம்பத்திய சுகமும் பெற்றோருக்கு பிள்ளைகளால் மேன்மையும் சிறப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். குரு பெயர்ச்சி 2025இல் மே மாதம் நடைபெறப்போகும்

குரு பெயர்ச்சி

அன்று இக்கோவிலுக்குச் சென்று குருபகவானை வணங்கி எல்லா நன்மைகளையும் பெறலாம். இங்கு பக்தர்களே தேங்காயை உடைக்கலாம். அவர்கள் உடைக்கும் போது இரண்டாக உடைபடும் தேங்காய் போல அவர்கள் இறைவனைத் துதிக்கும் போது அவர்களின் துன்பங்களும் நொறுங்கிப் போகும்.

இக்கோயில் குரு வாரமான வியாழக் கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகலில் 12 முதல் நான்கு மணி வரை கோவில் அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் திறந்து இருக்கும்.

மாலையில் இருந்த தலைமுடி, தண்டிக்க எண்ணிய மன்னன், தலைமுடியுடன் காட்சியளித்த பெருமாள்

மாலையில் இருந்த தலைமுடி, தண்டிக்க எண்ணிய மன்னன், தலைமுடியுடன் காட்சியளித்த பெருமாள்

 

சிறப்பு வழிபாடுகள்

கோவிந்தா வாடியில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் குரு பெயர்ச்சி நாட்களிலும் மகா சிவராத்திரி அன்றும் சங்காபிஷேகம் நடைபெறும். 108 மற்றும் 1008 சங்குகளில் புனித நீர் எடுத்து குரு பகவானுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

நாக தேவதை

மற்ற கோவில்களில் இல்லாத ஓர் சிறப்பு கோவிந்த வாடி கோவிலில் உண்டு.இங்கே உள்ள நாக தேவதையின் தலை நாகமாக விளங்க வால் நாகத்தின் வாலாக இருக்காது. நாகம்மா இங்கு மனித உடம்புடன் காட்சி அளிக்கின்றாள்.

இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்கி உட்கார்ந்து இருகிறாள். ராகு கேதுக்களால் நாக தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை மற்றும் புத்திர ருத்ர தோஷம் உள்ளவர்கள் கோவிந்தபாடி குருபகவான் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபட்டால் நாக தோஷம் விலகும்  

குருபெயர்ச்சி பலன்கள் அள்ளித்தரும் கோவிந்த வாடி குருபகவான் கோவில் | Govindavadi Guru Temple

விநாயகரின் சிறப்புத் தோற்றம்

இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகரும் சிவபெருமானுக்கு நிகரானவராக காட்சியளிக்கின்றார். காரணம் ஆவுடையாரில் நடுவில் லிங்கபானம் இருந்து இருப்பதை சிவாலயங்களில் காணலாம். ஆனால் இங்கு ஆவுடையாருக்கு நடுவில் சிவனுக்குப் பதில் விநாயகர் இருக்கின்றார். இதன் காரணம் என்னவெனில் இது பழைய தாந்திரிக புத்தர் கோயில் ஆகும். கௌதம் புத்தரை அவர்கள் வி நாயகர் - சிறந்த நாயகர் என்று அழைத்தனர்.

ஆவுடை என்பது யோனியின் குறியீடாக. தாந்திரீக பௌத்தர்கள் லிங்க பாணத்துக்குப் (இந்திரன்) பதிலாக புத்தரை ஆவுடையில் இருத்தி ஒரு காலத்தில் வழிபட்டுள்ளனர். தமிழகத்தில் பௌத்தம் மக்கள் செல்வாக்கை இழந்ததற்கு ஒரு காரணம் துறவிகளின் தாந்திரீக யோகம் ஆகும். கோவிந்தவாடியில் விநாயக ரூபத்தில் சிவபெருமான் இருக்கின்றார். 

கருவறை நாதரான சிவன்

கோவிந்த வாடியில் குருவுக்கு பின்னால் கிழக்கு நோக்கி இருக்கும் கருவறையில் கைலாசநாதர் லிங்க ரூபத்தில் காட்சி தருகின்றார். இங்கு அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி.

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

கோவிந்தன் கோயில்

கோவிந்த வாடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருநாமம் சந்தனக் குங்குமம் கோவிந்தன். இப்பெயருக்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. இவருக்கு திரு மண் (நாமம்) காப்பிடும்போது மண்ணால் ஆன காப்பிடுவதில்லை.

மாறாக சந்தனமும் குங்குமமும் கலந்து திருமண காப்பு இடுகின்றனர். இவர் மேற்கு நோக்கிய சன்னதியில் அருள் பாலிக்கின்றார். பெருமாளுடன் பூதேவி ஸ்ரீதேவி கருடாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய அனைவரும் கருவறைக்குள் இடம் பெற்றுள்ளனர்.

ஆதிசங்கரர்

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் சிவன் கோவில்களாக மாற்றப்பட்ட பழைய பௌத்த கோவில்களுக்கும் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களுக்கு சென்று சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்துள்ளார். தாரா தேவி (தனி அம்மன்) கோவில்களுக்குப் போய் அவற்றை அம்மன் கோவில்களாக மாற்றி தாடங்கம் ஸ்ரீ சக்கரம் போன்றவற்றைப் பதித்துள்ளார். இங்கும் அவர் வந்து சில மாற்றங்களை செய்தார் என்பதற்கு அறிகுறியாக அவருக்கு திருச்சுற்றில் தனிச் சன்னதி உள்ளது.    

கோவிந்தவாடியில் பௌத்த தடயங்கள்

கோவிந்தவாடி குருபகவான் கோவிலின் உள்ள பல அம்சங்கள் இக்கோவில் பழைய பௌத்த கோவில் என்பதை உறுதி செய்கின்றன. பௌத்த முனிவர்கள் அவலோகத்தீஸ்வரர் அல்லது கௌதம புத்தர் போன்றவர்களை மக்கள் முனி, சாமி, குரு என்று அழைத்தனர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து ஞானோபதேசம் செய்யும் சிலை ஆரம்ப பௌத்தம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் புத்தர் சிலையாகப் பல இடங்களில் இருந்தது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.







+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US