அரசு வேலை கிடைக்கப்போகும் 5 ராசிகள் - எதெல்லாம் பாருங்க

By Sumathi Dec 30, 2025 06:15 PM GMT
Report

 ஜனவரி 24, 2026 சூரிய பகவான் மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். பிப்ரவரி 6, 2026 வரை சூரியன் திருவோண நட்சத்திரத்தில் பயணிப்பார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

அரசு வேலை கிடைக்கப்போகும் 5 ராசிகள் - எதெல்லாம் பாருங்க | Govt Job For 5 Zodiac Signs Suriya Peyarchi 2026

மேஷம்

புதிய பொறுப்புகள் தேடி வரும். பணியிடத்தில் ஒரு குழுவை தலைமை தாங்கும் அளவிற்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடும். அதிகாரம் மிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். தந்தை வழியில் சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும் ஆன்மீகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்

எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சுமைகள் குறைந்து, மன நிம்மதி ஏற்படும். 

2026-ல் குரு-சுக்கிரன் தரும் யோகம் - இவங்களுக்கெல்லாம் கல்யாணம் உறுதி

2026-ல் குரு-சுக்கிரன் தரும் யோகம் - இவங்களுக்கெல்லாம் கல்யாணம் உறுதி

கன்னி

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்படும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். 

மகரம்

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நேரமாகும். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான காலம் நெருங்கியுள்ளது. நீங்கள் தொடங்கும் எந்த செயலும் வெற்றியில் முடியும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US