குரு பகவானின் பார்வை பட்டு ஜொலிக்கப் போகும் ராசிகள் யார் தெரியுமா?
குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். மிதுனம் புதன் பகவானின் சொந்த வீடாகும். அப்படியாக குரு பகவானின் இந்த மிதுன ராசி பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போகிறது. அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த சம்பளஉயர்வு, மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமைய போகிறது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடகம்:
கடக ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி மனதில் உள்ள கவலைகள் எல்லாம் விலக செய்கிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடு சென்று வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய உள்ளது. குழந்தைகளால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி புது வாழ்வை தேடிக்கொடுக்க போகிறது. மாணவர்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சமுதாயத்தில் நீங்கள் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |