குரு பகவான் அருளால் அதிர்ஷ்டத்தை தன் வசம் ஆக்கும் ராசிகள்
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றி கொள்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ஒரு மனிதனின் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்க கூடியவர் குருபகவான்.அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து இடம் மாறுகிறார்.வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.குரு பகவானின் இந்த பயணம் எந்த ராசியினருக்கு என்ன மாற்றத்தை வழங்க போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் ரோகினி நட்சத்திர பயணம் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிய வீடு மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.வாழ்க்கையில் நீங்க,நினைத்த மாதிரி பெரிய அளவை அடைவீர்கள்.வேலை தேடுபவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.
திருமணம் பந்தம் மகிழ்ச்சியை தரும்.உங்களுக்கு எதிராக நடந்தவர்கள் இன்று சாதகமாக செயல்படுவார்கள்.மாணவர்கள் நினைத்த படிப்பை படிக்கும் யோகம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசிக்கு குருபகவான் ரோகிணி நட்சத்திர பயணம் அதிர்ஷ்ட நிறைந்த காலமாக அமைய போகிறது.கடக ராசியில் குரு ஒன்பதாவது வீட்டில் நுழைந்துள்ளார்.ஆதலால் இவர்கள் சந்தித்த பண கஷ்டம் எல்லாம் விலகும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் விலகும்.உடல் ஆரோக்கியத்தில் உண்டான சிக்கல் விலகும்.வெற்றியை தேடி தரும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசியில் 11-வது வீட்டில் குருபகவானின் ரோகிணி நட்சத்திர இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும்.வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.உறவினர்களால் உண்டான பிரச்சனைகள் விலகும்.வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உயர் அதிகாரிகளுக்கு பெயரும் மதிப்பும் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |