குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 4 ராசிகள்- அதிர்ஷ்டம் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்குமாம்
ஜோதிடத்தில், குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் அமோகமாக வந்து விடுவார்கள். ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கட்டாயம் குருபகவானுடைய ஆசீர்வாதமும் துணையும் இருக்க வேண்டும்.
மேலும் குரு பகவானுக்கு மிகவும் பிடித்த சில ராசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் குருவின் பார்வை இருக்கும். அப்படியாக குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 4 ராசிகள் யார் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் இருக்கிறார். இதனால் இயல்பாகவே கடக ராசியினருக்கு குரு பகவானுடைய அருள் இருக்கிறது. இவர்கள் குருபகவானுடைய அருளால் பிறரை வழி நடத்துவதில் சிறப்பாக இருப்பார்கள். தன்னுடைய அறிவை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்கள். எவ்வளவு பெரிய பொறுப்புகளை இவர்களிடம் கொடுத்தாலும் அதை எளிதாக கையாளுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். குரு பகவான் உடைய துணை எப்பொழுதும் தனுசு ராசிக்கு இருக்கும். இவர்கள் குரு பகவானுடைய ஆசிர்வாதத்தால் பொருளாதாரத்திலும் கல்வியிலும் எப்பொழுதும் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் குரு பகவான் உடைய அருள் பெற்று இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள்.
சிம்மம்:
சூரிய பகவானுக்கும் குரு பகவானுக்கும் இயல்பாகவே ஒரு தொடர்பு உண்டு. ஆதலால் சிம்ம ராசிக்கு குரு பகவான் உடைய தாக்கம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். இவர்கள் குரு பகவான் உடைய அருளால் சமுதாயத்தில் நற்பெயருடனும் புகழுடனும் வாழ்வார்கள். பண பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குரு பகவானுடைய அருளால் அவர்கள் அதை சமாளித்து மீண்டு எழுவார்கள்.
மீனம்:
குருபகவான் தனுசு மற்றும் மீன ராசியை ஆளும் கிரகமாக இருக்கிறார். ஆதலால் மீன ராசிக்கு இயற்கையாகவே குருபகவானுடைய அதீத ஆசீர்வாதம் கிடைக்க பெறுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் குருபகவான் உடைய அருளால் முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்வார்கள் . சமுதாயத்தில் அங்கீகாரம் எப்பொழுதும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







