குருவின் நட்சத்திர மாற்றம்- அதிர்ஷ்டத்தை கொண்டாடப்போகும் ராசிகள் யார்?
குருவின் நட்சத்திர மாற்றம்- நாளை முதல் அதிர்ஷ்டத்தை கொண்டாடப்போகும் ராசிகள் யார்? குரு பகவான் தற்பொழுது ரோஹிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். அவர் தற்பொழுது அவருடைய இடத்தை மாற்ற உள்ளார்.
அதாவது குருபகவான் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். இந்த இரண்டு மாதம் காலம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல புத்துணர்ச்சியும், செல்வ செழிப்பும் கொடுக்க போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசிக்கு மனதில் தைரியம் கொடுக்க போகிறது. இவர்கள் வெளியூர் சென்று சந்தோஷமான நேரத்தை செலவிடுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தனியார் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்:
குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு பணியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எதையும் தைரியமாக சிந்தித்து செயல்படுவார்கள். ஒரு சிலருக்கு வெகு நாட்களாக முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்று நல்ல முடிவு பெரும். வாங்கிய கடன்களை அடைப்பார்கள்.
சிம்மம்:
குரு பகவானின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்கு மன அமைதியை கொடுக்கும். நிதி நிலையில் உள்ள சிக்கல்கள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கி சேர்ப்பீர்கள். தாய் தந்தை உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |