குரு பகவானின் அருளை பெற தினமும் செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாக இருக்கிறார். மேலும், ஒருவருக்கு குரு பகவானின் அருள் கிடைத்து விட்டால் அந்த மனிதர் வாழ்க்கையில் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுவார். அது மட்டுமல்லாமல் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கான சக்தியை குருபகவான் தருகிறார்.
அந்த வகையில் குரு பகவானை நாம் முறையாக வழிபடுவது அவசியமாக இருக்கிறது. அவரை தொடர்ந்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கை நல்ல நிலைக்கு செல்வதை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி அன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு வந்து இருக்கிறார்.
இந்த குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக, தினமும் குரு பகவானின் அருளை பெறுவதற்கு சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம்.

குரு பகவான் தியான ஸ்லோகம் :
"தேவானாம்ச ரிஷீனாம்ச,
குரும் காஞ்சன ஸந்திபம் புத்தி,
பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!"
குரு காயத்ரி மந்திரம் :
"ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்"
தினமும் காலையில் குளித்துவிட்டு குரு பகவானின் இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வேலைக்கு செல்லும் பொழுது நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் தெளிவும், தடைகளும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |