குரு பலன்கள் 2025: சிறப்பான யோகம் பெற போகும் ராசிகள்
நரகிரகங்களில் ஞானத்தை வழங்கக்கூடியவர் குரு பகவான். இவர் ஒருவர் ஜாதகத்திற்கு மங்கள யோகத்தை தரக்கூடியவர். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை அவருடைய தனுசு ராசி பயணத்தை மாற்றுகிறார்.
குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்று இருந்தால் அனைத்து விதமான யோகத்தையும் வழங்குகிறார். அந்த வகையில் குரு பகவான் கடந்த வருடம் 2024ஆம் ஆண்டு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பயணம் செய்தார்.
இந்த வருடம் 2025 மே மாதம் அவருடைய ராசியை மாற்றுகிறார். அந்த மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக குரு பகவானின் இந்த மாற்றம் எந்த ராசிகளுக்கு மிக பெரிய யோகம் கொடுக்க போகிறது என்று பார்ப்போம்.
சிம்மம்:
குரு பகவானின் இந்த இடமாற்றம் சிம்ம ராசிக்கு தெளிவான முடிவு எடுக்கும் ஆற்றல் கொடுப்பார். குடும்பத்தில் உள்ள சிக்லகள் விலகும். புதிதாக தொழில் மற்றும் வியாபாரம் செய்ய திட்டமிடுவீர்கள். வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
கடகம்:
குரு பகவானின் இடமாற்றம் கடக ராசிக்கு தொழில் ரீதியாக வளர்ச்சியை தர போகிறார். மாணவர்களு படிப்பில் ஆர்வம் அதிகம் ஆகும். வாழ்க்கையில் சந்தித்த சிக்கலைகளை படிப்படியாக கடக்கும் ஆற்றலை குரு பகவான் வழங்குவார்.
ரிஷபம்:
குரு பகவானின் இந்த இட மாற்றம் ரிஷப ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத பிரச்சனைகள் நல்ல முடிவு பெரும். வாழ்க்கை சம்பந்தமான முடிவுகளில் தெளிவு பிறக்கும். அரசு வேலைக்காக தயார் ஆகும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |