2026 குரு பெயர்ச்சி: இந்த ராசிக்கு ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட் காந்திருக்கிறதாம்
நம்மில் பலரும் நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் தீர திடீர் என்று ஜாக்பாட் அல்லது அதிர்ஷ்ட கதவுகள் திறக்காத என்று எதிர்பார்த்திருப்பது உண்டு. அதை போல் இன்னும் ஒரு சிலர் கஷ்டப்பட்டு உழைப்பதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு வந்த பணத்தை ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வணிகங்களில் முதலீடு செய்து லாபங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அப்படியாக, ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நல்ல வகையில் அதிர்ஷ்டம் பெற வேண்டும் என்றால் குரு பகவானுடைய அருள் இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் 12 ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுகிறது.
அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் ஷேர் மார்க்கெட்டில் யோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது திடீர் யோகத்தை பெற்று கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு தொழில் ரீதியாக சம்பள உயர்வு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் ஃபண்ட் போன்றவற்றால் இவர்கள் முதலீடு செய்யும் பொழுது நல்ல லாபத்தை பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகிறது. அதேபோல் பணம் கையில் தங்குவதற்கு இவர்கள் சில முயற்சிகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு டிரேடிங் மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்றவற்றின் வழியாக ஒரு நல்ல எதிர்பாராத தன லாபம் இருக்கிறது. இருந்தாலும் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இவர்களுக்கு ஷேர் மார்க்கெட் மட்டும் வெளிநாட்டு தொடர்பான முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. பண முதலீடுகளில் பெறக்கூடிய லாபத்தினால் நீங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் வீடு புதுப்பிக்கக்கூடிய காலமாக அமையப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |