கோடிகளை கொடுக்க போகும் குரு-எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
நவகிரகங்களில் மிகவும் மங்களமாக திகளக்குடியவர் குருபகவான்.இவர் வருடத்திற்கு ஒருமுறை அவருடைய இடத்தை மாற்றுகிறார்.இவருடைய இடமாற்றம் எப்பொழுதும் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ஒரு மனிதனுக்கு நல்ல கல்வி,வாழ்க்கை,மகிழ்ச்சி உண்டாக கட்டாயம் குரு பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்க வேண்டும்.அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார்.இது புதன் பகவானின் சொந்த ராசி ஆகும்.இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன் வழங்க உள்ளது.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு கட்டாயம் குரு பகவானின் இடமாற்றம் தொழில் ரீதியாக நல்ல மாற்றம் கொடுக்கும்.தொழிலில் சந்தித்த சிக்கல்கள் எல்லாம் சரி ஆகும்.அதே போல் சிலர் வேலை காரணமாக தொலை தூர பயணம் செல்ல நேரிடலாம்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பகவானின் இடமாற்றம் படிப்பில் நல்ல ஆர்வம் வழங்கும்.மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள்.சிலருக்கு வேலையில் மாற்றம் அமையும்.சம்பள உயர்வு கிடைக்கும்.பெற்றோர்கள் இடையே உண்டான கருத்து வேறுபாடுகள் விலகும்.
சிம்மம்:
நீண்ட நாட்கள் துன்பம் மட்டுமே சந்திக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு குருபாகவனின் இந்த இடமாற்றம் முதலில் தொழிலில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.மனதில் ஏற்பட்ட கவலைகள் தீரும்.சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |