குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

By Yashini Apr 30, 2024 04:30 PM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

தற்போது குரு மேஷ ராசியில் பயணித்து வருகிறார், வருகிற மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார்.

இந்நிலையில், குருபகவானின் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்க போகின்றன. 

மேஷம்

வேலையில், தொழிலில் இருப்பவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட முடியும். ஆளுமை மேம்படும். நல்ல அதிர்ஷ்டம் பெருகும். காதல் மற்றும் திருமண வாழ்வில் உங்கள் உறவுகள் இனிமையாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.

குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | Guru Peyarchi Palankal 2024

ரிஷபம்

குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்கு தான் சஞ்சரிக்க போகிறார். இது உங்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். புதிய வாகனம் வாங்கலாம் அல்லது வெளியூர் பயண கனவு நிறைவேறலாம். மே 1 க்குப் பிறகு, வங்கிக் கடனின் சுமை குறையத் தொடங்கும், ஏனெனில் உங்கள் நிதி நிலைமை மேம்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  

குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | Guru Peyarchi Palankal 2024

மிதுனம்

திருமணம் கை கூடி வரலாம் அல்லது உங்கள் காதல் வாழ்க்கையை தொடங்க ஒரு துணையை நீங்கள் காணலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் சில புதிய வேலையைத் தொடங்கலாம், அதில் உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் செல்லலாம். அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | Guru Peyarchi Palankal 2024

சிம்மம்

எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் பெயரும் புகழும் உயரும். 

குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | Guru Peyarchi Palankal 2024

துலாம்

மே 1 முதல், நீங்கள் உங்கள் தொழிலில், வேலையில் வருமானம் அதிகரிக்கத் தொடங்கலாம், மேலும் முன்னேற உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அசையும் அல்லது அசையா சொத்தை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.  ]

குரு பெயர்ச்சி பலன்கள்.., இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | Guru Peyarchi Palankal 2024

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US